Skip to main content

இரவு பகலாக உழைப்பு - 'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ விழா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

 

ar rahman about ps 2 audio launch

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் 'அக நக' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை முதல் பாகத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

 

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்றைய ஆடியோ வெளியீட்டிற்கு 35 மாஸ்டர்களை வழங்கிய எனது சவுண்ட் இன்ஜினீயர்களுக்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார். மேலும், இரவு பகலாக உழைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.