ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து, சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள "மாளிகை'' படத்தை தில்.சத்யா எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகை ஆண்ட்ரியா பேசும்போது....

"இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு ஹிந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.