Skip to main content

“அட்லீயிடமிருந்தும் அதை கற்றுக்கொண்டேன்” - 'அன்பறிவு' இயக்குநர் அஸ்வின் ராம் பேட்டி 

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

Aswin Raam

 

அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேஷி, நெப்போலியன், விதார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அன்பறிவு திரைப்படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் அஸ்வின் ராமை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில், இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராகப்  பணியாற்றிய அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"அட்லீ எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். நான் ராஜாராணி படத்தில் அவருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அவர்கூட நான் செலவழித்த நேரங்களில் நிறைய கற்றுக்கொண்டேன். இத்தனை நடிகர்கள் உள்ள ஒரு பெரிய படத்தை அறிமுக இயக்குநராக சிறப்பாக கையாண்டீர்கள் என்று சிலர் சொன்னார்கள். அதை நான் அவரிடம் இருந்தும் கற்றுக்கொண்டேன். அவர் களைப்பே அடையாமல் வேலை பார்க்கக்கூடியவர். 24 மணி நேரமும் தூக்கத்திலும்கூட நம் படம் எல்லாரையும் சென்றுசேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருப்பார்".   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அல்லு அர்ஜுனுக்கு ஜோடி - இரண்டு ஹீரோயின்களிடம் அட்லீ பேச்சு வார்த்தை

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
trisha or samantha to pair in atlee next allu arjun movie

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

trisha or samantha to pair in atlee next allu arjun movie

இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டு வருவதையடுத்து தற்போது ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா மற்றும் சமந்தா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுன் பிறந்தநாளான வருகிற 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. த்ரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், மலையாளத்தில் ஐடென்டிட்டி, ராம் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா படத்தை கைவசம் வைத்துள்ளார். சமந்தா சிட்டாடெல் நெப் தொடரை வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் வருகிற 8ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாள் விருந்தாக வெளியாகிறது.

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.