Amy Jackson chennai movie shooting spot

Advertisment

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே'. எம்.ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நிறைவடைந்த நிலையில், சென்னையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. சென்னை பின்னி மில்லில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் செலவில் லண்டனில் உள்ள சிறைபோன்ற பிரமாண்டமான செட் அமைத்துப் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இதில், வெளிநாட்டைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பங்கேற்று நடிக்க உள்ளனர். அந்த வகையில்தமிழ் மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த எமிஜாக்சன்இப்படத்தில் இணைந்துள்ளார். இதற்காகசென்னை வந்துள்ள எமிஜாக்சன் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.