Skip to main content

மீண்டும் அமிதாப்பச்சனுக்கு கரோனா

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

Amitabh Bachchan tested + positive on CoViD test

 

உலக நாடுகள் முழுவதும் கரோனா பாதிப்பால் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி மறைந்தனர். அந்த வகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டார். பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார்.

 

இந்நிலையில் அமிதாப்பச்சன் மீண்டும் இரண்டாவது முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கரோனா சோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தயவு செய்து என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என வலியுறுத்தியுள்ளார். இதனிடையே அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.    

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமிதாப் பச்சனுக்கு அறுவை சிகிச்சை

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Amitabh Bachchan undergoes angioplasty in hospital

அமிதாப் பச்சன் தற்போது ரஜினி - த.செ. ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். மேலும் நாக் அஷ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் கல்கி 2898 ஏ.டி படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு பட படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில் இன்று அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ”எப்போதும் நன்றியுடன்” எனப் பதிவிட்டுள்ளார். 

81 வயதுடைய அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் அவர் பூரண குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Next Story

ராமர் கோவில் குடமுழுக்கு - வருகை தந்த திரைப் பிரபலங்கள்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
rajini in ramar temple opening ceremony

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணலைக் கொண்டு கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் குடமுழுக்கு விழா இன்று மிகப் பிரம்மாண்டமாக நடக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கின்றனர். 

பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவவுள்ளார். பல்வேறு சிறப்பம்சங்களுடன் நடக்கும் இந்த விழாவில் அழைப்பு விடுக்கப்பட்ட திரைப் பிரபலங்கள் அனைவரும் தற்போது கோவிலுக்குள் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப் ஆகியோர் வந்துள்ளனர்.