![akshay kumar starring soorarai pottru hindi remake film](http://image.nakkheeran.in/cdn/farfuture/6B40xMCFqdJoRJ7sicrFljKu0CUJKrewtt_oOXIR8pg/1643441686/sites/default/files/inline-images/akshay_1.jpg)
கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியானது ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்கவுள்ள நிலையில் சூர்யா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா, தமிழில் இயக்கிய 'சூரரை போற்று' படத்தில் சண்டை காட்சிகள் இல்லை, ஆனால் இந்தியில் இரண்டு சண்டை காட்சிகள் இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.