Skip to main content

அஜித் வழிநடத்தும் 'தக்ஷா' குழுவுக்கு கிடைத்த கெளரவம்!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

AjithKumar's Daksha team Selected Produce Indian Government Drones

 

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) பிரிவில் ஆளில்லாத சிறிய ரக விமானங்களை (drone)  வடிவமைக்கும் 'தக்ஷா' என்ற மாணவர் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகர்களாக இருந்து வருகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தை பல்கலைக்கழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துள்ளார். 'தக்ஷா' மாணவர் குழு தொடர்ந்து மாநில அளவிலான சிறிய ரக விமான (ட்ரான்) தயாரிப்பில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகிறது. 

 

இந்நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரான்) தயாரிப்பதற்கு 'தக்ஷா' தேர்வாகியுள்ளது. இந்திய முழுவதும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரான்) தயாரிப்பதற்கு 5 நிறுவனங்கள் தெரிவாகியுள்ளது. அதில் ஒன்றாக அஜித் வழிநடத்தும் தக்ஷா மாணவர் குழு தேர்வாகியுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்து உள்ளது. மேலும் இதற்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மாஸ்டராக மாறிய அஜித் - வீடியோ வைரல்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
ajith bike video latest

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் இப்படப்பிடிப்பு நடந்து வந்தது. விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

சமீபத்தில், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்கி 2025 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ajith bike video latest

திரைப்படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அஜித் மீண்டும் தனது பைக் டூர் பயணத்தை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று அஜித், நடிகர் ஆரவ் உள்ளிட்ட சிலருக்கு பைக் ஓட்டும் நுணுக்கங்களை சொல்லி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து, ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.