/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gd_3.jpg)
1989-ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'வெற்றிவிழா' படத்தின் ஜிந்தா கதாபாத்திரத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் 'சலீம் கவுஸ்'. தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'சின்ன கவுண்டர்' படத்தில் வில்லத்தனமான சிரிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு அஜித் நடிப்பில் வெளியான 'ரெட்' படத்திலும், விஜய் நடிப்பில் வெளியான 'வேட்டைக்காரன்' படத்திலும் வில்லனாக நடித்து இந்த தலைமுறையினரிடம் பிரபலமானார். தமிழ் மொழியை தாண்டி இந்தியில் பல படங்களிலும் மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார். ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'கா' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்நிலையில் 70-வது வயதான 'சலீம் கவுஸ்' உடல் நலக்குறைவால் இன்று இயற்கை எய்தினார். சலீம் கவுஸ் மறைவிற்கு ரசிகர்களும், திரைபிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)