ajith son got 1st prize in running race in his school competition

அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது குழந்தையான மகன் ஆத்விக் அவரது பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இதனை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், பள்ளியில் விளையாட்டு போட்டி நடக்கும் நிலையில் அதில் ஓட்டப்பந்தையத்தில் மற்றும் ரிலே ரேஸில் ஆத்விக் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாலினியின் பதிவிற்கு கீழ் தந்தையை போலவே மகனும் இருக்கிறார் என அஜித்தின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பலர் ஆத்விக்கிற்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ajith son got 1st prize in running race in his school competition

அஜித் தற்போது கார் ரேஸில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில் துபாயில் சமீபத்தில் நடந்த 24 ஹெச் சீரிஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் தற்போது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தை வைத்துள்ளார். இதில் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் 6ஆம் தேதியும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

Advertisment