ajith next with adhik ravichandran

Advertisment

அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா, வில்லனாக சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில்சமீபத்தில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை அடுத்து மீண்டும் ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத்தகவல் வெளியானது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன், சமீபத்தில் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கினார். இப்படம் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியான நிலையில், உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றி விழாவில் கூட என்னுடைய வெற்றிக்குஅஜித் தான் காரணம் எனச் சொல்லியிருந்தார். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன், தீவிர அஜித் ரசிகர் என்பது கூடுதல் தகவல். அதன் காரணத்தால் தான் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.