ajith, manju warrier ready to joined thunivu shooting held on Bangkok

அஜித், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் உள்ளிட்ட சில நகரங்களில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'துணிவு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது. அந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அஜித் மற்றும் மஞ்சு வாரியார் பாங்காக்கிற்கு புறப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அஜித், மஞ்சு வாரியார் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment