Skip to main content

ஐஸ்வர்யா வீட்டு கொள்ளை விவகாரம் - மேலும் தங்க நகைகள் மீட்பு

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

aishwarya rajinikanth house jewellery theft case latest information

 

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக ஐஸ்வர்யா வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை விசாரித்தனர். அதில் பணிப்பெண் ஈஸ்வரி திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி அவர் விற்பனை செய்துள்ளார்.

 

ஈஸ்வரியிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டுப் பத்திரம் ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கி கணக்கில் அடகு வைத்துள்ளார். இதனை தற்போது மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். 

 

இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறையினர் கோரிய நிலையில் அவர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஈஸ்வரியிடம் இருந்து மேலும் 43 சவரன் தங்க நகைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பொருட்களைக் கைப்பற்றியுள்ள நிலையில் இன்னும் தங்க நகைகள் மீட்டெடுக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அடடா ஆட்டம் பாட்டம் தான்’ - அம்பானி குடும்ப ப்ரீ வெட்டிங்கில் திரை பிரபலங்கள்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024

 

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடந்து முடிந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

ஒன்றிணைந்த ரஜினி - ஏ.ஆர் ரஹ்மான்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
lal salaam enters in to 3rd week

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். லைகா தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

முன்னதாக இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எங்க அப்பா சங்கி கிடையாது என பேசியது சர்ச்சையானது. பின்பு ரஜினியும் சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை என விளக்கமளித்திருந்தார். பின்பு ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த 2ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முதல் நாள் திரையரங்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு கொடி அறிமுகம் செய்திருந்தனர் திருச்சி ரஜினி ரசிகர்கள். இதனிடையே படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இப்படம் 3ஆவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் படக்குழு ஒன்றிணைந்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ரஜினி, ஏ.ஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் இடம்பெற்றிருக்கின்றனர்.