Aishwarya Rai Maharashtra minister

மகாராஷ்டிராவில் பழங்குடியின நலத் துறை அமைச்சர் விஜய்குமார் காவித், நந்துர்பார் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அங்கு பேசும் பொழுது ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியிருந்தார். அவர் பேசியது, "ஐஸ்வர்யா ராயின் கண்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். எவ்வளவு அழகாக இருக்கிறது. கர்நாடகாவின் மங்களூரு கடற்கரைப் பகுதியில் அவர் வளர்ந்தவர். மீன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் அவருக்கு இவ்ளவு அழகான கண்கள் உள்ளன.

Advertisment

மீன் சாப்பிடுவதால் இரண்டு நன்மைகள் உள்ளன. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் அழகாகவும், கண்கள் பளபளப்பாகவும் இருக்கும். அவர்களைப் பார்க்கும் எவரும் எளிதில் மயங்கிவிடுவார்கள். மீனில் சில எண்ணெய்கள் உள்ளன, இது உங்கள் சருமத்தை மென்மையாக்குகிறது" என்றார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்ப காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் விஜய்குமார் காவித். அதில், "பழங்குடியினரைப் பற்றி பேசுவதால் அவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தை வழங்குவது முக்கியமானது. ஆனால் நான் பேசியதைஊடகங்கள் தவறாக காட்டிவிட்டனர். எனக்கும் மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ராயும் எனக்கு மகள் போன்றவர் தான். அவர் ஒரு நியாயமான பெண் மற்றும் மீன் எண்ணெயின் நன்மைகளை விளக்குவது எளிதானது அல்ல என்பதை புரிந்துகொள்வார்" என்றார்.