/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/121_43.jpg)
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தில் நடிக்கிறார். முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_33.jpg)
இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக முன்பே படக்குழு அறிவித்திருந்தனர். கடந்த கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இப்படத்தில் விருமாண்டி புகழ் அபிராமியும், நாசர் உள்ளிட்ட பிரபலங்கலை தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைந்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. இதையடுத்து ஐஷ்வர்யா ராய் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதற்கு முற்றும் புள்ளி வைக்கும் வகையில் தற்போது ஐஷ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார் என்பது குறிப்பிடதக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)