Skip to main content

மேக்கப் அறையில் தீ விபத்து - பிரபல நடிகை கவலைக்கிடம்

 

Actress Sharmeen Akhee in critical condition after fire accident during film shoot

 

'சின்சியர்லி யுவர்ஸ் டாக்கா', 'பைஷே ஸ்ரபோன்', 'பாண்டினி' உள்ளிட்ட படங்களின் மூலம் வங்கதேசத் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஷர்மீன் அகீ. இவர் தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பபில்  கலந்து கொண்டுள்ள நிலையில், அங்கு தீ விபத்து ஏற்பட்டு  தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

 

அவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது மேக்கப் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து நடிகையின் கை, கால்கள் மற்றும் முகம் உட்பட பல பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 

உடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடல்நிலை மோசமடைந்து தற்போது பிளாஸ்மா ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் சொல்லியுள்ளனர்.