Skip to main content

"சாதியில் உடன்பாடில்லை அதனால் நீக்கச் சொல்லிவிட்டேன்" - சம்யுக்தா அதிரடி

 

actress Samyuktha about caste identify

 

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தமிழில் 'களரி', 'ஜூலை காற்றில்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி 2021 ஆம் ஆண்டு வெளியான 'எரிடா' படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

 

நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அனைத்து பாடல்களையும் நேற்று இசை வெளியீட்டின் மூலம் படக்குழு வெளியிட்டிருந்தது. 

 

இந்த நிலையில் சம்யுக்தா, தனது பெயருக்கு பின்னால் சாதி அடையாளத்தை குறிப்பிட விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "படங்களில் உள்பட எனது பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி அடையாளத்தை நீக்கச் சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. மீடியாக்களும் என்னை சம்யுக்தா என்று மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். சாதியில் எனக்கு உடன்பாடில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். சம்யுக்தாவின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 

 

மிஸ் பண்ணிடாதீங்க

சார்ந்த செய்திகள்