Skip to main content

"அந்த சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டேன்" - சமந்தா குணமடைய பிரார்த்திக்கும் நடிகை பியா

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Actress Pia Bajpiee relates to the pain of Samantha Myositis disease

 

தமிழில் ‘பொய் சொல்லப் போறோம்’, ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பியா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வந்த பியா 2018ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்தியில் உருவாகும் 'லாஸ்ட்' படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

 

ad

 

இந்நிலையில் சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பியா கூறுகையில், "சமந்தாவின் நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்காக நான் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். ஏனென்றால் அவர் தற்போது இருக்கும் நிலைமை என்னால் உணர முடிகிறது.

 

கடந்த 2016ம் ஆண்டு ஒருநாள் காலில் வீக்கம் ஏற்பட்டு பின்பு அதன் வீக்கமும் தசை வலியும் அதிகமாக இருந்தது. அந்த வலியால் என்னால் உட்காரவோ நிற்கவோ முடியவில்லை. பிறகு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்தேன். தசை அலர்ஜி நோய் என்று அப்போது தான் தெரிய வந்தது. பிறகு மீண்டும் அதனை உறுதிப்படுத்த டெல்லி மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தேன். அங்கு அப்படி தசை லார்ஜி நோய் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அந்த சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டேன். அது பயங்கரமானவை. அதனால் சமந்தாவின் நிலைமை புரிகிறது. அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் - அனுபவம் பகிர்ந்த சமந்தா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Samantha fainted on the movie shooting set

சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இத்தொடர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த மாதம் முதல் அதை தொடங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் சமந்தாவும் அவரது நண்பர் ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் கல்லீரல் குறித்து பேசியிருந்தார். அப்போது, “டேண்டலியன் என்கிற ஒருவகை மூலிகைத் தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என சமந்தா தெரிவித்ததையடுத்து அவர் பேசியது தவறான கருத்து என ஒரு மருத்துவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில், படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார். “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் சீரிஸில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலே மயங்கி விழுந்துவிட்டேன். அந்த சமயத்தில் அல்கேஷ் பெருமளவு உதவினார்” என்றார்.