2011ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கானின் தந்தை தனது மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் பல மாதங்களாக விசாரணை நடத்தினர். பின்பு லைலா கானின் தாயார் செலினாவின் 3வது கணவர் பர்வேஸ் தக்கை இந்த வழக்கு தொடர்பாக லைலா கானின் தாயார் செலினாவின் 3வது கணவர் பர்வேஸ் தக்கை போலீஸார் கைது செய்தனர்.
அவரை கைது செய்த ஒன்பதுமாதங்களுக்குப்பிறகு, அவர் தான் சொத்து தகராறு காரணமாக நடிகைலைலாகான்மற்றும் அவரது தாயார், 4 உடன் பிறந்தவர்களைமஹாராஷ்ட்ராநாசிக்கில்உள்ள பங்களாவில் கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொன்றஉடல்களைப்பங்களா நிலத்தில் புதைத்து பின்பு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பங்களாவில் அழுகிய நிலையில்லைலாகான்மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது பெரும்பரபரப்பைக்கிளப்ப இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை மும்பைசெஷன்ஸ்கோர்ட்டில்நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில்,பர்வேஸ்தக்மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி சச்சின்பவார்கடந்த9ஆம் தேதிஅறிவித்தார். இந்த நிலையில் 13வருடங்களுக்குப்பிறகு இந்த கொலை வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.பர்வேஸ்தக்கிற்குமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.