/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/64_48.jpg)
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து பிரபலமானவர் விஸ்வேஷ்வர ராவ். 6 வயதிலிருந்தே நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிதாமகன் படத்தில் லைலாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார். நடிப்பது மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் விஸ்வேஷ்வர ராவ், உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 62. இவரது உடல் சென்னை சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விஸ்வேஷ்வர ராவ், மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைச்சுவை நடிகர் ஷேஷூ காலமானார். அதை தொடந்து வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலாமனார். இவர்களைத்தொடர்ந்து தற்போது விஸ்வேஷ்வர ராவ் காலமாகியுள்ளது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)