Skip to main content

நடிகர் விநாயகன் கைது! 

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Actor Vinayakan arrested by ernakulam police

 

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன் தமிழில் 'காளை', 'திமிரு', 'சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. 

 

நடிகர் விநாயகன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இன்று அவர் வசித்துவரும் எர்ணாகுளம் அடுக்குமாடிக் குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தவர்கள் எர்ணாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், நடிகர் விநாயகனை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர் மது போதையில் இருந்துள்ளார்.

 

அப்படி அழைத்துச் செல்லப்பட்ட விநாயகன் எர்ணாகுளம் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, மீண்டும் அங்கு சத்தம் போட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் மீது எர்ணாகுளம் போலீஸார், காவல் நிலைய பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தார் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் ரத்தத்தில் மதுவின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய போலீஸார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.எம்.டி.பியின் டாப் 10 இந்தியப் படங்கள் - இடம்பெற்ற 2 தமிழ்ப் படங்கள்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

IMDb Top 10 Most Popular Indian Movies of 2023

 

ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த இணையதளம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், மக்களின் பெரும் கவனங்களைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டாப் 10 மிகவும் பிரபலமான இந்திய படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளது. முழு பட்டியல் விவரம் பின்வருமாறு...

 

1. ஜவான் (இந்தி)

2. பதான் (இந்தி)

3. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (இந்தி)

4. லியோ (தமிழ்)

5. ஓஎம்ஜி 2 (இந்தி)

6. ஜெயிலர் (தமிழ்)

7. கதார் 2 (இந்தி)

8. தி கேரளா ஸ்டோரி (இந்தி) 

9. து ஜோதி மெயின் மக்கார் (இந்தி)

10. போலா (இந்தி)
 

 

 

Next Story

“படம் பார்த்ததற்கு எனக்கு சொகுசு கார் தந்திருக்க வேண்டும்” - கார்த்திக் ப. சிதம்பரம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Karti p Chidambaram tweet about movie

 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவர் ப. சிதம்பரம். தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகனும், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினராகத் தற்போது இருந்து வருபவருமான கார்த்திக் ப. சிதம்பரம். காங்கிரஸ் கட்சி தொடர்பான சில விசயங்களை, விமர்சனங்களை சமூக வலைத்தள பக்கத்தில் மறைமுகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிடுவார். ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் நுழையும்போது எதிரே நின்ற கார்த்திக் சிதம்பரம் கை குலுக்க நீட்டியபோது ராகுல்காந்தி கை கொடுக்காமல் மறுத்து சென்றுவிட்டார். இது சமூக வலைத்தள பக்கத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான போது காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. எல்லோரும் வருந்திக் கொண்டிருந்த போது, கார்த்திக் ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘நெட்பிளிக்ஸ்ல பார்ப்பதற்கு நல்ல படம் இருந்தால் பரிந்துரையுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார். சொந்த கட்சி பின்னடைவை சந்தித்தபோதும் அதையும் மீறி சினிமா பார்க்கும் அளவிற்கு தீவிர சினிமா ரசிகராகவும் இருந்திருக்கிறார். 

 

இந்நிலையில் நேற்று சினிமா தொடர்பாக ஒரு பதிவிட்டிருக்கிறார் அதில், “நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.” என்று பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சொகுசு கார் பரிசளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் கார்த்திக் ப. சிதம்பரம் ஜெயிலர் திரைப்படத்தைத் தான் கிண்டலடித்திருக்கிறார் என்று சொல்லி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.