Skip to main content

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

 Actor thadi Balaji wife Nithya arrested

 

தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் பிரபலமானவர் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். 

 

நித்யா தனது குழந்தையுடன் சென்னை மாதவரம் பகுதி சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். நித்யா வசித்து வரும் அதே பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் அடிக்கடி கார் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

 

இந்த நிலையில் நித்யா நேற்று நள்ளிரவு அந்த ஆசிரியரின் காரை கற்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். காலை எழுந்து தனது காரை பார்த்த ஆசிரியர் சேதமடைந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது சேதப்படுத்தியது நித்யா தான் என்பது அந்த ஆசிரியருக்கு தெரியவந்துள்ளது. 

 

இது தொடர்பாக நித்யா மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஏன் அவுங்க உயிரோட இருக்காங்க" - முதல்வரிடம் கை கூப்பி கோரிக்கை வைத்த தாடி பாலாஜி

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

thadi balaji about thiruthanai issue

 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் இரும்பு கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தனர். மேலும் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியிருந்தனர். இதனை கண்டித்து அங்கிருந்த மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்ப தற்போது நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த செய்தியை கேட்கும் போது உடம்பே கூசுது. இதுங்க என்ன ஜென்மம். இதுங்க எல்லாம் ஏன் உயிரோட இருக்காங்கனு புரியவில்லை. நீங்க அந்த பள்ளியில் படிச்சிருக்கலாம். அல்லது உங்க குழந்தை அந்த பள்ளியில் படிக்கலாம். 

 

யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படி பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், 6 அறிவு உள்ளவர்களா இல்லை 5 அறிவு உள்ள மிருகமா. இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம். எவ்ளோ பெரிய தப்பு. குழந்தைகளுடைய படிப்பு கெடுது. இன்றைய சூழலில் அரசு பள்ளிகள் சிறந்த பள்ளி என்று நிறைய இடத்தில நானே பேசியிருக்கிறேன். கண்கூடாக பார்த்திருக்கிறேன். 

 

முதலில் ஒரே ஒரு விஷயம் நினைச்சிக்கங்க. நம்ம முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு குழந்தை சாதிச்சது என்றால், தான் சாதித்தது போல் அக்குழந்தையை அழைத்து கொண்டு பாராட்ட கூடிய நல்ல மனம் கொண்ட மனிதர் அவர். இந்த சூழலில் இப்படி நீங்கள் பண்ணினால் எவ்ளவு கேவலமா இருக்கு. இது எவ்ளோ பெரிய தவறு. நான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரை கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்ற குற்றங்கள் நடக்க கூடாது. அதுவும் உங்க ஆட்சியில் நடக்க கூடாது. 

 

அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய சப்போர்ட் எப்போதுமே இருக்கும். விரைவில் அந்த பள்ளிக்கு நேரடியாக வந்து பார்க்கிறேன்" என்றார்.   
 

 

 

Next Story

"அரசியலில் நுழைகிறேன்" - தாடி பாலாஜி பேட்டி

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

thadi balaji about his political entry

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். மேலும் தமிழ் பாடத்தில் நந்தினியை தவிர்த்து லக்‌ஷயாஸ்ரீ என்ற மாணவி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று பலரது கவனத்தை ஈர்த்தார். 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தனம் பச்சையப்பன் மெட்ரிக் பள்ளியில் படித்த லக்‌ஷயாஸ்ரீக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜி மாணவியை ஃபோனில் அழைத்துப் பாராட்டிய நிலையில் மாணவியின் இல்லத்திற்கு சென்று நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மாணவியின் பெயரில் லட்சியம் இருக்கிறது. கண்டிப்பாக அவரது லட்சியம் நிறைவேறும் என்று நினைக்கிறேன். அவரது மேற்படிப்புக்கு என்னால் இயன்ற உதவியை செய்வதாக உறுதியளித்திருக்கிறேன். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று பலரும் சொல்லி வரும் சூழலில் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்த லக்‌ஷயாவை பாராட்டுவது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார். 

 

மேலும், "பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நிறைய நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார். குறிப்பாக நம்முடைய முதலமைச்சர் முழு மூச்சோடு இருக்கிறார். இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்தி அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார். அப்போது அரசியல் வருகை குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, "நான் முன்பு சொன்னது போல விரைவில் வருவேன். வந்தால் கண்டிப்பாக நிறைய நல்லது பண்ணுவேன். கூடிய விரைவில் அதை முறையாக அறிவிப்பேன். தனியாக கட்சி ஆரம்பிக்கும் ஐடியா இல்லை. எனக்கான ஒரு சின்ன அங்கீகாரம் கிடைக்கும் கட்சியில் பணியாற்றத் தயாராகவுள்ளேன்" என்றார். 

 

பாலாஜி, நித்யா என்பவரை திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார். நித்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.