Skip to main content

விஜய்சேதுபதிக்கு சிவகுமார் பாராட்டு

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

actor sivakumar praised vijay sethupathi after watch maamanithan movie

 

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் பல விருதுகளைப் பெற்றது. 

 

இந்நிலையில் நடிகர் சிவகுமார் மாமனிதன் படத்தை பார்த்து விஜய்சேதுபதியை பாராட்டியுள்ளார். இது குறித்து சிவகுமார், "ஏற்றுக்கொண்ட பாத்திரம் எதுவாயினும் அலட்டி கொள்ளாமல் அதன் போக்கில் நடித்துவிட்டு போய்க்கொண்டே இருப்பது என்றாலும், இந்த படத்தில் ரொம்ப கவனமாக அழுத்தமான நடிப்பை அவரிடம் பார்க்கமுடிகிறது" என பாராட்டியுள்ளார். இதே போல் இயக்குநர் சீனுராமசாமியையும் சிவகுமார் பாராட்டியுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

சால்வையைத் தூக்கியெறிந்த விவகாரம் - விளக்கமளித்த சிவகுமார்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
sivkumar about shawl throw iss

நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த வகையில் காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் சிவக்குமார் கலந்துகொண்டபோது, வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்தார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது.   

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் மற்றும் அந்த பெரியவர் இருவரும் ஒன்றாக வீடியோ வாயிலாகப் பேசியுள்ளனர். சிவகுமார் பேசியதாவது, “அந்த பெரியவர் யாரோ எவரோ இல்லை. என் தம்பி. 50 ஆண்டுகால நண்பர். அவர் கல்யாணத்தையே நான்தான் பண்ணி வச்சேன். அது மட்டுமல்ல, மகள் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பேரன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பொதுவா ஒரு நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை அணிய வந்தார்கள் என்றால், அதை திருப்பி அவங்களுக்கே போத்திருவேன். சால்வை அணியும் பழக்கம் எனக்கு கிடையாது. 

அன்னைக்கு 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சு 10 மணி ஆகும்போதுதான் நான் பேசுனேன். அப்போவே செம்ம டயர்ட் ஆகிருச்சு. கீழ கரீம் நின்னுக்கிட்டு இருந்தார். எனக்கு சால்வை போடுறது பிடிக்காது என்பதை தெரிஞ்சு அந்த மனுசன் கையில் சால்வையோடு நின்னுக்கிட்டு இருந்தார். பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழ போட்டது தப்புதான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருத்தமும் படுகிறேன்” என்றார். சிவகுமார் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடுவே அந்த பெரியவரும், சிவகுமாருக்கும் அவருக்கும் உண்டான நட்பை பற்றி பேசினார். மேலும் சிவகுமாருக்கு சால்வை போடுவது பிடிக்காது என்பது தெரிந்தும் சால்வை எடுத்து வந்தது தப்பு தான் எனக் கூறினார்.