Skip to main content

‘கே.ஜி.எஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்கள் ஓடினாலும் லாபம் தராது - பிரபல நடிகர் பேச்சு

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

actor raj kapoor talk about rrr and kgf2 movie

 

எஸ்.ஆர் ஹர்ஷித் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மெய்ப்பட செய். ஆதவ் பாலாஜி கதாநாயகனாக நடிக்க, மதுநிக்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஆதவ் பாலாஜி, மதுநிக்கா, ராஜ்கபூர், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய நடிகர் ராஜ்கபூர், “இந்தப்படத்த மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி பாடலில் அசத்தியுள்ளார். இப்போதெல்லாம் இப்படி பாடல் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் நடிக்கும் போது மாயாண்டி குடும்பத்தார் படம் ஞாபகம் வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன் தான் எடுப்பார். ரசிச்சு எடுப்பார். ’கே.ஜி.எஃப்’ ஓடுச்சு, ’ஆர்.ஆர்.ஆர்’ ஓடுச்சு என்கிறார்கள், ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நாலு வருடம் எடுத்தார்கள் அதெல்லாம் லாபமே தராது. மைனா 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது. அது தான் படம். ஓடுது ஓடுது என சொல்லும் படத்தில் கதை கேளுங்கள், ஒன்னும் இருக்காது. ஜெய்பீம் எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது. அது மாதிரி இந்த படமும் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்‌ஷன்... பில்டப்... நட்பு - வெளியான சலார் ட்ரைலர்

Published on 01/12/2023 | Edited on 02/12/2023

 

prbhas salaar trailer released

 

கே.ஜி.எஃப்' இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

 

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜுலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது.

 

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன.  மேலும் நட்பிற்கு முக்கியதுவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர். கே.ஜி.எஃப் படத்தில் இடம்பெற்றது போல் ஹீரோவிற்கான பில்டப் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. படத்திற்கான புக்கிங் வருகிற 15ஆம் தேதி முதல் தொடங்குவதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

Next Story

பிரதமர் மோடியை கிண்டல் செய்த மல்லிகார்ஜுன கார்கே; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

Mallikarjuna Kharge taunted PM Modi in Rajya Sabha

 

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' இரு படக்குழுவினருக்கும் மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது முதலில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆஸ்கர் விருது பெற்ற இருதரப்பினரை வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன். விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். அது பெருமையாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை பாஜகவினர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது. நாங்கள் தான் தயாரித்தோம் என்றோ, நாங்கள் தான் பாடல் எழுதினோம் என்றோ, நாங்கள் தான் கதை எழுதினோம் என்றோ, குறிப்பாக மோடிதான் இந்த படங்களை இயக்கினார் என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. இது இந்திய நாட்டின் பங்களிப்பு” என்றார். இது மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

அதன்பிறகு பேசிய நரசிம்ம ராவ், “ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் எடுத்த படம். அவர்களுக்கு விருது கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூற, அடுத்து பேசிய மதிமுக தலைவர் வைகோ, “தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது வாங்கி கொடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.