Skip to main content

நடிகையின் 'மீ டூ 'புகார்: மூன்றாண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அர்ஜுன்

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

actor arjun released in sruthi hariharan meeto case

 

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி மீ டூ இயக்கத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் அளித்திருந்தார். தமிழில் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான ‘நிபுணன்’ படத்தில் அர்ஜுன், ஸ்ருதி ஹரிஹரன் இருவரும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று மீ டூ இயக்கத்தில் புகார் அளித்திருந்தார். இது தென்னிந்திய திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இதனைத்தொடர்ந்து, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கப்பன் பார்க் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பிறகு நடிகர் அர்ஜுன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை மறுத்த அர்ஜுன், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

 

ad

 

இதையடுத்து, நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புகார் மீது மூன்றாண்டுகளாக நடைபெற்றுவந்த விசாரணையின் இறுதி அறிக்கையை நேற்று (29.11.2021) கப்பன் பார்க் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், நடிகர் அர்ஜுன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இவ்வழக்கிலிருந்து அர்ஜுன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது குடும்பத்தில் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” - அர்ஜுன் 

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
arjun about modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார் நடிகர் அர்ஜுன். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கோவிலுக்கு அவரை அழைத்திருக்கிறேன். விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். நான் பிஜேபியில் இணையவில்லை. முதலில் அரசியல் நமக்கு தெரியாது. முதல் தடவை அவரை சந்திக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு ஆளுமை. எனது குடும்பத்திலும் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்றார். சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘விடாமுயற்சி’ - ஏ.கே. க்ளிக்ஸ்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023

 

 

 

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.

அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரவ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது உறுதியாகிவிட்டது. அஜித்துடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று யூகியுங்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவிற்கு கீழ் அனைவரும் அஜித் என கமெண்ட் செய்திருந்தனர். 

இந்த நிலையில் படக்குழுவை அஜித் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அர்ஜுன் நேற்று பகிர்ந்திருந்த புகைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனியின் புகைப்படம், ரெஜினா கெஸாண்ட்ராவின் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட் செய்யப்பட்டார். முதற்கட்ட படப்பிடிப்பும் அவர்தான் பணியாற்றினார். ஆனால் அண்மையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.