bgdshsdfbd

Advertisment

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், நேற்று (23.07.2021) கோலாகலமான துவக்க விழாவுடன் தொடங்கியது. இந்தநிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றுள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை யாங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரஷ்யா வெள்ளி பதக்கத்தையும், சுவிட்சர்லாந்து வெண்கலத்தையும் வென்றுள்ளது.

இதற்கிடையே, பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்துவரும் நிலையில், நடிகர் ஆரி அர்ஜுனன் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

bfbfxnfdn

Advertisment

"2016 ரியோ ஒலிம்பிக்கில் எடைப்பளுவை தூக்கவே முடியாமல் பதக்கத்தை தவறவிட்டவர், இந்தமுறை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை வென்ற மீராபாய் சானுவை வாழ்த்துவோம் ❤? தோல்வி நிரந்தரம் அல்ல.. #MeerabaiChanu" என பதிவிட்டுள்ளார். மீராபாய் சானுவின் வெள்ளிப் பதக்கம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.