/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/275_2.jpg)
ரஜினிகாந்த், 1975-ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தன் ஸ்டைலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள ரஜினி இந்திய நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தமிழ்நாட்டின் உயரிய விருதான கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கியுள்ளார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 160 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15 அல்லது 22 ஆம் தேதிகளில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 47 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை வீட்டில் தன் குடும்பத்தோடு ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். மேலும் ரஜினி ரசிகர்களோடு இணைந்து திரை பிரபலங்கள் பலரும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)