35 year old man passed away during pushpa 2 screening

புஷ்பா பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக கடந்த 5ஆம், தேதி வெளியாகியிருக்கும் படம் புஷ்பா 2 - தி ரூல். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.922 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே இந்தப் படம் தொடர்பாக தொடர்ந்து அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்து வருகிறது. ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்ட போது, அங்கு அல்லு அர்ஜூன் சென்ற நிலையில் அவரை காண ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்ததால் அதில் சிக்கி ரேவதி(39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் இழப்பீடு தரவுள்ளதாக உத்தரவாதம் கொடுத்தார்.இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர், மேலாளர், பால்கனி மேற்பார்வையாளர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் அனந்தபுரத்தில் பேலஸ் திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருந்த போதே35 வயதுள்ள மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் மது போதையில் படம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவ திரையரங்கில் பரபரப்பு ஏற்படுத்தசம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது மரணத்திற்கு மது அருந்தியதே காரணமாக இருக்க கூடும் என சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.