Skip to main content

இந்தியாவில் நடைபெறும் 2023 உலக அழகி போட்டி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

2023 miss world competion held in india

 

1951 ஆம் ஆண்டு முதல் உலக அழகி (MISS WORLD) போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தாண்டுக்கான உலக அழகி போட்டி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதனை உலக அழகி போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

 

மேலும் அவர் பேசுகையில், "2023 ஆம் ஆண்டுக்கான 71வது உலக அழகிப்போட்டி வருகிற நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி 30 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொள்கின்றனர்" என்றார்.  

 

இதைத் தொடர்ந்து இந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பங்கேற்கும் மிஸ் இந்தியா வேர்ல்ட் சினி ஷெட்டி, “உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சகோதரிகளை சந்திப்பதற்கு உற்சாகத்துடன் காத்திருக்கிறேன். இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவேன்" என்றார். 

 

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகி பட்டம் வென்றார். இதுவரை நடந்த உலக அழகி போட்டிகளில் 6 இந்தியர்கள் வென்றுள்ளார்கள். கடைசியாக 2017 ஆம் ஆண்டில் மானுஷி சில்லார் இப்பட்டத்தை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மிஸ் வேர்ல்ட்' பட்டம் வென்ற போலந்து அழகி - இரண்டாமிடம் பிடித்த இந்திய வம்சாவளி பெண்

Published on 18/03/2022 | Edited on 18/03/2022

 

Karolina Bielawska wins miss world crown Indian American Shree Saini 1st runner up

 

அமெரிக்காவில் உள்ள புவேர்ட்டோ தலைநகரில் நேற்று முன்தினம் உலக அழகிப்போட்டி(மிஸ் வேர்ல்ட்) நடைபெற்றது. இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகிப்பட்டம் வென்றார். நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் படித்து வரும் கரோலினா பைலாவ்ஸ்கா மாடல் அழகியாக தொடரவும், எதிர்காலத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பை படிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

இந்த உலக அழகிப்போட்டியில் அமெரிக்காவில் வாழும் இந்தியரான ஸ்ரீ சைனி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை பூர்வீகமாகக் கொண்டவர். இருப்பினும் ஸ்ரீ சைனி உலக அழகிப்போட்டியில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மானசா வாரணாசி 13ஆவது இடம் பிடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.