Skip to main content

விஜய் யேசுதாஸ் படத்தை இயக்கும் 10 வகுப்பு மாணவி

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

10th student directing vijay yesudas

 

பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அத்துடன் நடிப்பிலும் கவனம் செலுத்தும் விஜய் யேசுதாஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகனாக அறிமுகமானார். அதன் பிறகு படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

 

இந்நிலையில் விஜய் யேசுதாஸ் அடுத்தாக 10 ஆம் வகுப்பு மாணவி சின்மயி நாயர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.  பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கங்காரு படத்தின் கதையை எழுதி திரையுலகில் அறிமுகமான அனில் ராஜின் மகள் தான் சின்மயி நாயர். 10 ஆம் வகுப்பு இவர் விஜய் யேசுதாஸை வைத்து கிளாஸ் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சின்மயி நாயரின் தந்தை அனில்ராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தில் பாடகர் யேசுதாஸ், சுதீர், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். சாபு குருவிலா மற்றும் பிரகாஷ் குருவிலா ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிரேமலு’ படத்தைப் பாராட்டிய முன்னணி தமிழ் நடிகர்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
The leading Tamil actor praised the film 'Premalu'

சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களான மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, பிரமயுகம் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. 

இதில், ‘பிரேமலு’ திரைப்படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கியிருந்தார்.  நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரன் ஆகிய நான்கு நடிகர்கள் தயாரித்திருந்தனர். விஷ்ணு விஜய் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியாகி, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் ‘பிரேமலு’ படம் இடம்பெற்றுள்ளது.

The leading Tamil actor praised the film 'Premalu'

இந்த நிலையில், ‘பிரேமலு’ படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக ‘பிரேமலு’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

"பக்காவான கமர்ஷியல்; தெறிக்குது .. மீண்டும் பார்க்க விரும்புகிறேன்" - புகழ்ந்து தள்ளிய கீர்த்தி சுரேஷ்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

keerthy suresh about rdx malayalam movie

 

மலையாளத்தில் ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ், மகிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'ஆர்டிஎக்ஸ்'. சோபியா பால் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளது. 

 

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இப்படத்தை பாராட்டி படக்குழுவினரை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் பார்க்க விரும்பும் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எமோஷன் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் அருமையாக இருந்தது. ராபர்ட், டோனி மற்றும் சேவியர் மூவரும் படத்தை தாங்கி பிடித்துள்ளார்கள். திரையில் அவர்களைப் பார்க்கும் போது தெறியாக இருந்தது. 

 

மகிமா நம்பியார் அழகாக இருக்கிறார். நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் காட்சிகள் பின்னிட்டாங்க. சாம் சி.எஸ்ஸோட பின்னணி இசை தெறி" என குறிப்பிட்டுள்ளார்.