Published on 12/03/2022 | Edited on 12/03/2022






தெலுங்கில் 'கிராண்ட் காளி', 'ப்ரேம கதா சித்திரம் 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சித்தி இட்னானி தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ள சித்தி இட்னானி காதலை மையமாக வைத்து இயக்குநர் சசி இயக்கும் 'நூறு கோடி வானவில்' படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தி இட்னானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கிரீன் கலர் சாரியில் கலர்ஃபுல்லாக சித்தி இட்னானி தோன்றியுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.