Published on 08/03/2022 | Edited on 08/03/2022









கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் 'மாறன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மாளவிகா மோகனன் போட்டோ ஷூட் செய்து தன்னுடைய கலர்ஃபுல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார்.
அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு நிற சாரியில் வெளியான இந்த புகைப்படங்கள் பலரது கவனத்தை பெற்று வருகிறது.