பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா, கூகுள் குட்டப்பா, ப்ரெண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்லியா, கூகுள் குட்டப்பா, ப்ரெண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Next Story
‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, பூவையார், மனோபாலா, ‘பிளாக்’ பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 6-ஆம் தேதி ‘கூகுள் குட்டப்பா’ படம் திரையரங்கில் வெளியாகும் என தெரிவித்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
இயக்குநர் லயோனல் ஜோசுவா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'அண்ணபூர்ணி'. ஹரி கிருஷ்ணன் வடசென்னை, மெட்ராஸ், கபாலி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 'அண்ணபூர்ணி'படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை ஹரி பாஸ்கர் மற்றும் நேதாஜி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
த்ரில்லர் ட்ராமா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பணிகளை முடித்து திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.