Published on 25/04/2022 | Edited on 25/04/2022





இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் படக்குழு வெளியீட்டுப் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.