தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான சிவகார்த்திகேயன், அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார். 'டான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.கே. புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பானது இன்று (11.02.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இத்தகவலை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. பூஜை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.