Skip to main content

நிக்கி கல்ராணி வீட்டில் டும்டும்டும்; வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நிக்கி கல்ராணி முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்றார். இதனைத்தொடர்ந்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'கலகலப்பு 2', 'மொட்டை சிவா கேட்ட சிவா', 'மரகத நாணயம்' என பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே 'மரகத நாணயம்' படத்தில் நடித்த ஆதியும் நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும்  தகவல் வெளியாகியது.

 

இந்நிலையில் ஆதி - நிக்கி கல்ராணி இருவருக்கும் நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிக்கி கல்ராணி, தங்களது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் டூ ஒலி - மீண்டும் வித்தியாசம் காட்டும் வெற்றிக் கூட்டணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Aadhi and Arivazhagan Sabdham movie teaser released

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு. 

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

உருவாகும் மரகத நாணயம் 2

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Maragadha Naanayam 2

 

ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'மரகத நாணயம்'. ஃபேண்டஸி காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டில்லிபாபு தயாரித்திருந்த இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா...' பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார். படத்தை, முதல் பாகத்தைத் தயாரித்த டில்லிபாபுவே அவரது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.