Skip to main content

மூன்று தலைமுறை பெண்கள்; ஒரே நேரத்தில் நேர்ந்த கொடூரம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 50

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
thilagavathi-ips-rtd-thadayam-50

மூன்று தலைமுறை பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

இந்தோரில் ஸ்ரீநகர் மெய்ன் என்ற ஏரியா, பணக்காரர்கள் வசிக்கும் நகர் அது. அங்கு 19.6.2011 அன்று நிரஞ்சனின் 70 வயது தாயார், 42 வயது மனைவி மற்றும் 22 வயது மகள் கொல்லப்பட்டு இருப்பதை கண்டு போலீஸ் அதிகாரிகள் வீட்டை நன்கு சோதனை செய்கின்றனர். இரண்டு துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அதில் ஒன்று அந்த மனைவியின் தலையில் இருந்தது. ஆனால்  இன்னொன்று எங்கிருந்து வந்தது என்று சந்தேகிக்கின்றனர். அடுத்ததாக கைரேகை நிபுணர், இந்த மூவர் இல்லாமல் இன்னொரு புதிய கை ரேகை இருப்பதை கண்டுபிடிக்கிறார் . அது ராகுல் சவுத்ரியுடையது தான் என்று சொல்கிறார். அது மட்டுமல்லாமல், அந்த இடத்தில, மூவர் ரத்தம் இல்லமால், இன்னொருவருடைய ரத்தம் கிடைக்கிறது. 

மேலும் வீட்டை சோதனை செய்ததில் அவர்களது பீரோ, லாக்கர் என அனைத்து இடங்களிலும் பார்த்ததில் நகை, பணம் என நிறைய தொலைந்திருக்கின்றன. ராகுல் என்பவனை பிடிப்பது காவல் அதிகாரிகளுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது.  இப்படி இருக்க 22.06.2011, காலை 6 மணிக்கு அருகிலிருக்கும் ஒரு எ .டி .எம் சென்டரில் ஒரு 22 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ஒரு கார்டை வைத்து நெடுநேரம் எ .டி . எம்  மிஷினில் போட்டு போட்டு எடுத்து கொண்டிருக்க சந்தேகம் வந்து போலீசார் அந்த பெண்ணை கவனமாக பெண் போலீஸ் கான்ஸ்டபில்சுடன்  பிடித்து விசாரிக்கின்றனர். விசாரித்ததில் அந்த பெண்ணும் தான் இந்த சம்பவத்தில் உடன்பட்டிருந்ததை ஒத்து கொள்கிறாள். அந்த நிரஞ்சனின் மனைவியை பியூட்டி பார்லரில் சந்தித்து நட்பாக்கி, அவரிடம் அடிக்கடி பேசி, அவரிடம் தான் பியூட்டி பொருட்கள் விற்பனை தொழில் செய்வதாக சொல்லி, தனக்கு பிசினஸில் உதவ முடியும் என்று சொல்ல, இருவரும் நிரஞ்சனின் வீட்டில் சந்திக்க ஏற்பாடு ஆகி இருக்கிறது. 

அவள் இந்த திட்டத்தை தன் காதலன் ராகுலிடம் சொல்லி இருவரும் மனோஜ் என்பவனுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். சொல்லியது போல அந்த பெண் நிரஞ்சனின் மனைவியை சந்திக்க 11 மணி அளவில் உள்ளே செல்கிறாள். அந்த பெண்மணியுடன் பிசினஸ் பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். அது சம்பந்தமாக ஒரு ஃபார்மில் கையொப்பம் போட வரும்போது, தனது காதலன் இங்கேதான் அருகில் இருக்கிறார். அவரும் பார்த்து விட்டு ஃபார்மில் கையெழுத்து போடுகிறேன் என்று சொல்லி அவனை  போனில் அழைக்கிறாள். 

உள்ளே வந்த இருவரும் குடிபோதையில் பணம் எங்கே என்று அவசரமாக கேட்க, அந்த பெண்மணி சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் சொல்ல முயலும்போது சட்டென்று அவளை ராகுல் நாட்டு துப்பாக்கியால் சுட்டு விடுகின்றான். சத்தம் கேட்டு வெளியே வந்த மாமியாரையும், மகளையும் மிரட்டி பணம் எங்கே என்று கேட்க, அந்த வயதான பெண்மணி சொல்லி விடுகிறார். பூட்டி இருக்கும் லாக்கர் சாவியை மகளிடம் கேட்டு வாங்கி எல்லா நகையும் கொண்டு வந்திருக்கும் பையில் போட்டு எடுத்துக்கொள்கிறார்கள். அவசரமாக உதவிக்குக் கூச்சல் போட்ட பாட்டியை மேகா கத்தியால்  கழுத்தை அறுத்து விடுகிறாள்.

மேலும் அந்த மகளையும் கொன்று போட்டு விட்டு செல்கின்றனர். இதற்கிடையில் நகையை எடுத்து வைத்து வரும்போது, அந்த வயதான அம்மாவை சுட முயலும்போது வெடிக்காத துப்பாக்கி, திடீரென்று வெடித்து ராகுலின் காலில் சுட்டு விடுகின்றது. அதிலிருந்து வந்த ரத்தம் தான் அங்கே பின்னாளில் போலீஸ் எடுத்தனர். அடிபட்டிருந்த ராகுலை தனது ஸ்கூட்டியில் வைத்து அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று காலில் இருந்த புல்லட்டை எடுக்க டாக்டரிடம் கேட்கின்றனர். அவர் இதனை போலீசில் கம்பளைண்ட் பதிவு செய்ய சொல்ல,  தன்னை யாரோ ஒரு மர்ம நபர் ரோட்டில் போய் கொண்டிருக்கும்போது திடீரென்று சுட்டு விட்டதாக எழுதி கொடுத்துவிட்டு, ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்கின்றனர். போலீஸ் ஏற்கெனவே அருகிலிருக்கும் மருத்துவமனைகளில் விசாரித்து வந்திருந்ததால், இவன் இங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பது அறிந்து இவனையும் பிடித்து விடுகின்றனர். வழக்கம் போல முறையாக விசாரித்ததில், தான் உபயோகித்த கத்தி, துப்பாக்கி என அனைத்தும் அந்த அருகிலிருந்த பெட்ரோல் பங்கில் அழுக்கு குட்டை ஒன்றில் போட்டு விட்டதாக சொல்கிறான். அதன்படி போலீஸ் அதை கைப்பற்றுகின்றனர். மேலும் ராகுலின் பங்கும், மேகாவின் பங்கையும், மனோஜின் பங்கையும்  அவரவர் வீட்டிற்கு சென்று எடுத்துவிட்டு, மூவரையும் போலீசார் கைது செய்கின்றனர். இந்தோர் மாவட்ட நீதிமன்றத்தில், மூவருக்கும் மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. மூன்று தலைமுறை பெண்களை கொன்ற அரிதிலும் அரிதான வழக்கு இது என்று சொல்லப்பட்டது. அதுவே முதல் முறையாக ஒரே குற்றத்தில் மூவருக்கும்  மரண தண்டனை கொடுப்பது முதல் தடவை என்றும், சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தில் தூக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படுகிறது. இதுவே உயர் நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற போது அப்படியே எல்லாமே மாறிவிட்டது. ஒரு திறமையான வழக்கறிஞர் நினைத்தால் குற்றவாளியை கூட காப்பாற்ற முடியும் என்ற சிறந்த எடுத்துக்காட்டு இதற்கு பின்னால் நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் வக்கீலுக்கு பணம் கொடுக்காவிட்டாலும், தனது திறமையை காட்ட இது போன்ற வழக்குகளை வக்கீல்கள் எடுக்கும் போக்கு அங்கு இருந்தது. எனவே அஞ்சனா பிரகாஷ் என்ற வக்கீல் மனோஜ் மற்றும் ராகுலுக்கு ஆஜர் ஆகிறார்.  ஸ்ரீ சிங்க் என்பவர் மேகாவிற்கு ஆஜர் ஆகிறார். அவசரத்தில் போலீஸ் விசாரணையின்போது அவர்கள் தவற விட்ட பல முக்கிய குறிப்புகளை தனக்கு சாதகமாக எடுத்து  திறமையாக வாதாடுகிறார். அதாவது போலீசிடம், மேகாவை எ .டி . எம்  சென்டரில் பிடித்ததாக சொன்னாலும், ஏன் அதனை உடனடியாக அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் பதிவு செய்யவில்லை, ஏன் விசாரணையை மேகா வீட்டில் வைத்து செய்திருந்தும் அங்கேயே கைது செய்யவில்லை, அது பொய். மேகா காவல் நிலையத்தில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதுபோல ஏன் கைது செய்தபோது, மேகாவின் தந்தையிடம் சட்டப்படி சொல்லவில்லை, திருட்டு போன ஒரு நகை பற்றி கூட கேஸ் ரிஜிஸ்டர் செய்யப்படவில்லை, சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பொருளில் கூட சீல் இல்லை, பொருள் ஒவ்வொன்றையும் சம்பவ இடத்தில் எடுத்ததற்காக ஒரு சாட்சி கூட இல்லை, பிடிக்கப்பட்டு 25 நாட்கள் கழித்து தான் ஐடென்டிபிகேஷன் பாரேட் செய்யப்பட்டிருக்கிறது, ஒரு அந்நிய ரேகை சம்பவ இடத்தில் எடுத்தாலும், அது அந்த வீட்டிலேயே புழங்கும் வேறொருவருடையதாக கூட இருக்கலாம், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டின் கவர், காவலாளியோடதாக கூட இருக்கலாம். மற்றும் அவர்கள் சிகிச்சை எடுத்ததற்காக கூறப்பட்ட அந்த மருத்துவர் போலி டாக்டர் வேறு என்றும், கைது செய்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி இருக்க வேண்டும், ஆனால் அப்படி போலீஸ் செய்யவில்லை. அதுமட்டுமின்றி மூவரையும் ஐந்து மணி வரை விசாரித்ததாக சொல்லியிருக்கும்போது, ஐ.ஜி மட்டும் எப்படி பத்திரிகையாளரிடம், மதியம் 12 மணிக்கே கைது செய்ததாக சொல்லிருக்கமுடியும். எனவே சிறு சிறு குற்றம் செய்து வந்திருக்கும் ராகுல் என்பவரை பொய்யாக  கிடைத்திருக்கும் சாட்சிகளை வைத்து கைது செய்ததோடு அல்லாமல், அவரது காதலி என்ற காரணித்தினாலும், மனோஜ் என்பவர் ஆயுதம் விற்பனை செய்பவர் என்ற காரணித்தினாலும், அவர்களை பொய்யாக குற்றம் சாட்டி கைது செய்திருக்கின்றனர் என்று ஆச்சர்யப்படுமளவுக்கு நிராகரிக்க முடியாத வாதங்களை எடுத்து வைக்கிறார். 

இந்த மூவர் தான் உண்மையான குற்றவாளிகள் என்று புரிந்தாலும், உச்ச நீதிமன்றத்தால், இவர் எடுத்து வைத்த வாதங்களை நம்புமளவுக்கு இருந்ததால், அவர்களது மரண தண்டனையை நிராகரித்து கடந்த வருடம், மே மாதம், இவர்களுக்கு 25 வருட சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. மேலும் சிறையில், மேகா 'சர்தோஷி' என்ற அலங்கார தையலை கூட இருக்கும் பெண் கைதிகளுக்கு சிறந்த முறையில் கைத்தொழிலாக முன்னேற சொல்லி கொடுத்ததால், அவளுக்கு இன்டர்நேஷனல் அவார்ட் கொடுக்கப்பட்டது.