rajkumar-solla-marantha-kathai-08

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார், சைக்கோ சீரியல் கில்லர் ஒருவன் பற்றிய தகவல்களை‘சொல்ல மறந்த கதை’ தொடர் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

உலகின் மிக இளம் வயது சீரியல் கில்லர் இந்தியாவைச் சேர்ந்தவன். அவன் முதலில் கொலை செய்ய ஆரம்பித்தபோது அவனுடைய வயது 7. வடமாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் அவன். அவனுடைய சித்தியின் குழந்தையை அவன் முதன்முதலாக கொலை செய்தான். அதை தன்னுடைய குடும்பத்தினரிடம் அவன் ஒப்புக்கொண்டான். அவனுடைய பெற்றோரும் அதை உலகத்திடமிருந்து மறைத்தனர். அதன் பிறகு விளையாடும்போது அங்கு ஒரு பையனை இவன் கொலை செய்தான்.

Advertisment

அதன் பிறகு தொடர்ந்து கொலைகள் செய்ய ஆரம்பித்தான். போலீசும் அவனைக் குறிவைத்தது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவன் விடப்பட்டான். அங்கிருந்து வெளியே வந்த பிறகு, இப்போதும் அவன் வெளியே சுற்றிக்கொண்டு தான் இருக்கிறான். சிலருக்கு பிறவியிலேயே இவ்வாறான கொடூர குணம் இருக்கும். இதுபோன்றவர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தால் உடனடியாக மனநல மருத்துவரிடம் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். நம்மைச் சுற்றி இதுபோல் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இதுபோன்றவர்கள் திருந்தி வாழ்வது என்பது மிக அரிதான ஒன்று. ஒருமுறை மாட்டிக்கொண்டால் அவர்கள் தங்களுடைய வழியை மாற்றிக் கொள்வார்கள். இது தவறு என்பதையே அவர்கள் உணர மாட்டார்கள். லஞ்சம் வாங்குவது தவறு தான். அது தெரிந்தும் லஞ்சம் அதிகம் பெறக்கூடிய பதவிகளை வாங்கவே பலரும் விரும்புகின்றனர். மனதுக்குள் விதைக்கப்பட்ட எண்ணங்களை மாற்றுவது மிகவும் கடினம். அந்த சைக்கோ கொலைகாரன் மொத்தம் எவ்வளவு கொலைகள் செய்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

பெரும்பாலும் குழந்தைகளையே அவன் கொன்றான். குடும்பத்திலேயே சைக்கோக்கள் பலர் இருக்கின்றனர். மருமகள் செய்த சமையலில் அதிக உப்பு சேர்த்து கெட்ட பெயர் வாங்கித் தர முயற்சித்த மாமியாரை நான் பார்த்திருக்கிறேன். அந்த கொலைகாரனின் தாய் அனுமார் தாயத்தை வாங்கி வந்து அவனுக்கு கட்டினார். அவனிடமிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக ஊரில் உள்ள அனைவருக்கும் அந்த தாயத்தை கட்டுமாறு போலீஸ் ஒருவர் அவன் தாயிடம் கூறினார். போலீசாரால் ஒருவரை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியாது. நாம் தான் சைக்கோத்தனமாக நடந்து கொள்கிறவர்களிடமிருந்து விலகி இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்.