![Lady Detective Yasmin Case Explanation 06](http://image.nakkheeran.in/cdn/farfuture/1h5xQ68vjc5uQGTlQQMSCVhRolYSWec8TrHJL9gwSfE/1686574702/sites/default/files/inline-images/yasmin_3.jpg)
மகனை போல வளர்த்த ஒருவனின் முறையற்ற செயலை கண்டுபிடித்தது பற்றிய ஒரு வழக்கு குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் நம்மிடம் விவரிக்கிறார்.
50 வயதான பெண் ஒருவர் தன்னுடைய அக்கா மகனைத் தன்னுடன் துணைக்கு வைத்து வளர்த்து வந்தார். கல்லூரியில் படிக்கும் அந்தப் பையன் இவரை நன்றாக கவனித்து வந்தான். ஆனால் இரவு தூங்கிய பிறகு தனக்கு ஏதோ நேர்வதாகவும் காலையில் தான் வேறு ஒரு கோலத்தில் தினமும் எழுவதாகவும் கூறினார் அந்தப் பெண். யாராவது தன் மீது ஆவி போன்றவற்றை ஏவி விடுகிறார்களோ என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. இதில் கண்டுபிடிப்பதற்கு ஏதும் இல்லாததால் இந்த வழக்கை ஏற்பதற்கு நாங்கள் தயங்கினோம். மருத்துவரிடம் செல்ல அவருக்கு அறிவுறுத்தினோம்.
தான் தூங்கியதற்குப் பிறகு தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். அந்த வழக்கை நாங்கள் எடுத்துக்கொண்டோம். இரவில் அவருடைய வீட்டை கவனிக்க ஆரம்பித்தோம். அவருடைய வீட்டுக்கு யாரும் வரவில்லை. ஆனாலும் அந்த அனுபவம் அவருக்குத் தொடர்ந்தது. அவருடைய வீட்டில் கேமரா பொருத்தினோம். பையன் தினமும் பால் கலந்து அவருக்கும் கொடுத்துவிட்டு அவனும் குடித்தான். சில நாட்களில் சர்க்கரைக்கு பதில் பாலில் வேறு எதையோ கலந்தான். அவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரிடம் அவன் தவறான உறவில் ஈடுபட்டான்.
இதை அவரிடம் எப்படிச் சொல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் அவனை அவ்வளவு நம்பினார். ஆனாலும் சொன்னோம். அக்கா - தங்கை, தந்தை - மகள் என்று சொல்லிவிட்டுத் தவறான உறவில் இருப்பது நிறைய நடக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லி வளர்ப்பது போல் ஆண் குழந்தைகளுக்கும் அறிவுரை சொல்லி வளர்க்க வேண்டும். பெண்களையும் ஒரு சக உயிராக ஆண்கள் மதிக்க வேண்டும். அதன் பிறகு அந்தப் பையனோடு அந்தப் பெண் இருக்கவில்லை. அந்தப் பையனும் அதன் பிறகு தன்னுடைய தவறை உணர்ந்து வாழ்ந்து வருகிறான். உறவுகளின் பெருமைகள் பற்றி, முக்கியத்துவம் பற்றி பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.