Skip to main content

வைகோவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து கலைஞருக்கு பொறாமையா ? கடந்த காலத் தேர்தல் கதை -5

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

2004 ஆம் ஆண்டு  திமுக தலைமையில் பலமான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது ஜனநாயக முற்போக்கு கூட்டணி . நிச்சய வெற்றி என்று அந்த கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகமா களமிறங்கியிருக்கும் நிலையில் மதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்தி வெளியாகின . அப்போது இது பற்றி வைகோவின் கருத்தை அறிய அவரை சந்தித்து பேட்டி எடுத்த போது அவர் கூறியது . 

 

vaikoஅப்போது வைகோ அவர்கள் எங்கள் இரண்டு கட்சி தொண்டர்களிடையே அந்த மாதிரியான நெருடல்கள் எதுவும் இல்லை .விருதுநகர் மாநாட்டுக்கு சென்ற போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் பாசம் பொங்க அன்போடு என்னை வரவேற்றார்கள் . இரண்டு கட்சி தொண்டர்களும் ஒன்றாக சேர்ந்து அணைத்து இடங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து தேர்தல் குறித்து ஓன்றை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம் . நெருக்கமான உறவோடு தான் நங்கள் தேர்தலை சந்திக்கிறோம் .40 இடங்களிலும் வெற்றி பெற முடியும் , மக்கள் ஆதரவு அலை இருக்கிறது என்பதை தலைவரிடம் சொன்னேன் . அந்த அளவுக்கு இயல்பான நெருக்கத்தோடு செயல் படும் போது நெருடலுக்கு ஒன்றும் இடமில்லை . மயிலாப்பூர் பொதுக் கூட்டம் நடந்த அதே நேரத்தில்  தி .நகரிலும்  ஒரு கூட்டம் நடந்ததையும் ஒரு செய்தியாக சொல்ராங்க . நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஒரே நேரத்தில் இரு கூட்டங்கள் நடப்பது சாதாரண விஷயம் .ஒரே நாளில் ஐந்து , ஆறு கூட்டங்கள் கூட நடக்கும் .  அன்றைக்கு மயிலாப்பூர் கூட்டத்துக்கும் வந்து விட்ட வேட்பாளர் டி .ஆர் . பாலு , கூட்டம் முடியும் வரை காத்திருந்து , என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுத்தான் சென்றார் . அதனால் நெருடல் என்ற பேச்சுக்கே இடமில்லை .எதிர் காலத்திலும் எந்த நெருடலும்  இருக்காது .

 

vaikoஅந்த சமயத்தில் வைகோ அவர்களுக்கு வரும் கூட்டத்தை பார்த்து கலைஞர் பொறாமை என்று கூட செய்திகள் வெளியாகின அதுக்கு வைகோ அவர்கள் கலைஞர் அவர்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைவார் . அவருடைய கவிதையை படிச்சு பார்க்கணும் . கவிதையை படித்து புரியாட்டி நாம அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது தான் . அவர் சங்கத் தமிழ் எழுதியவர் . குறளோவியம் தீட்டியவர் . பராசக்தி , மனோகரா , பூம்புகார் , குறவஞ்சி திரைக்காவியங்களை எழுத்திருக்கிறார் . அந்த பேனாவில் பல்லாயிருக்கணக்கான உடன் பிறப்பு மடல்கள் எழுத்திருக்கிறார் . அவர் , வைகோ வருக ... வாழ்க ... என்று பாசப்பட்டயமாக ஒரு கவிதை எழுதியிருக்காரே . அது காலத்தை வென்று நிற்கக்  கூடிய ஒரு கவிதை . அதுக்கு நான் தகுதியானவனா என்பது வேறு கேள்வி .

 

vaikoஆனால் அவர் அவ்வளவு பாசப்பிணைப்போடு , வீரன் நீ ., தீரன் நீ ., என்று எழுத்திருக்கிறார் . உன்னை நானறிவேன் என்னை நீயறிவாய் என்றெல்லாம் எழுத்திருக்கிறார் . இவை எல்லாம் இயல்பாக உள்ளத்தின் அடித்தளத்தில்  இருந்து வருவது . இன்னும் சொல்லப் போனால் , ஒரு கட்டத்தில்  ஒரு தாய் , மகனுக்கு வராகி கூடிய பெருமையை கண்டு எப்படி பூரித்திருப்பாளோ ? அப்படி தம்பிக்கு வரும் பெருமையை கண்டு நான் பூரித்து  புளகாங்கிதம் அடைகிறேன் என்று சொன்னார் . அந்த பாசத்தோடு தான் இருக்கிறார் இதெல்லாம் கற்பனையாக , எங்கேயாவது உருவாக்க முடியுமா ... என்கிற விசமத்தனமான நோக்கத்தில் யாரது எழுதலாம் , சொல்லலாம் தவிர  , இம்மியளவு கூட இதில் உண்மை கிடையாது . அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தான்  இது போன்ற செய்திகளை  பரப்புகிறார்கள் என்று கூறி இருந்தார்  .  2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு ஏற்காமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

 

 

Next Story

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Petition filed by Senthil Balaji dismissed

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை  தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கின் உத்தரவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மேலும் ஒரு மனுவைத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே எம்.பி, எம்.எல்.ஏ.விற்கான நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால் மனு மீதான விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி அல்லி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வரும் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘லட்சக்கணக்கான வீடுகள் கட்டித் தர இருக்கிறோம்’ - அமைச்சர் சக்கரபாணி!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
We are going to build lakhs of houses Minister Chakrapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டியிருக்கிறார். அந்த வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஏற்கனவே பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் தருமபுரியில் தொடங்கி வைத்துள்ளார். 

We are going to build lakhs of houses Minister Chakrapani

தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரியில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 388 ஒன்றியங்களில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஒவ்வொரு பகுதிகளிலும் 5 ஊராட்சிகளை இணைத்து அல்லது 20 ஆயிரம் மக்கள் தொகை கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்டம் வழங்க இருக்கிறார். அந்த வகையில் இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, புளியம்பட்டி, கொங்கமுத்தூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, தும்மலப்பட்டி ஆகிய 6 ஊராடசிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மனுக்களைப் பெற்று, அதற்கு தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியினை நடத்தி வருகிறரர். எனவே முதலமைச்சர ஆட்சி பொறுப்பேற்ற பின்பு குறிப்பாக பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடி 14 இலட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 இலட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் நகர பேருந்துகளில் சென்றால் கட்டணமில்லா சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 7 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழ்நாடு முதலமைச்சர் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கின்ற சுமார் 18 இலட்சம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. வருகின்ற 15 ஆம் தேதி அன்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் துவக்கி வைக்க இருக்கிறார். 

We are going to build lakhs of houses Minister Chakrapani

புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார். இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காவேரியிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு  முகாம்கள் 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024  வரை 23 நாட்கள்  68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை  நடைபெறவுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர் (முன்னோடி வங்கி), மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது.

இவ்வாறு பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும். அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு என்ற வகையில் செயல்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்” என்று கூறினார்.