தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், தாம்பத்திய உறவின் மனைவியின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காத கணவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு பெண் கவுன்சிலிங்கிற்காக வந்தார். இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்படும் வழக்கமான பிரச்சனைகளை தீர்ப்பதற்காக வந்தார். இப்படி அவர் பேசிக் கொண்டிருந்த போது, தங்களுக்குள் உள்ள இண்டிமேஸி லைஃப் பற்றிய கேள்விகளை கேட்கும் போது, அவர் சலிப்பாக ஏதோ இருக்கிறது மாதிரியாக பதிலளித்தார். அதுபற்றி கேள்விகளை இன்னமும் கேட்கும் போது அவர் பதில் சொல்வதற்கு சிறிது நேரம் யோசித்து, அது தான் பிரச்சனை என்றார். தங்களுக்குள் இருக்கும் தாம்பத்திய உறவு, அதிகபட்சம் 4 நிமிடங்கள் வரை தான் இருக்கும். தன்னை எப்போதும் கண்ட்ரோல் செய்யும் கணவர், சொல்லும் நேரத்தில் ரெடியாகி தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி அந்த உறவை, அதிகபட்சமாக 4 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டு அவர் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து போய்விடுவார். அப்போது, என்ன நடந்தது என்பது கூட தனக்கு தெரியாது. இதை பற்றி தெரிந்தகொண்ட பின், தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தோன்றியது. இதை பற்றி வெளியே யாரிடமும் சொல்ல முடியாத காரணத்தினால், தான் பிரச்சனையே உருவாகியது.
அந்த உறவில், தான் நினைத்த பொஷிசனில் மனைவி இருக்க வேண்டும் என்று கட்டளையிடுவார். மனைவியின் உணர்வு என்ன என்பதையே அவர் கேட்பதில்லை. கிட்டத்தட்ட, மனைவி ஒரு மெஷின் போல் அவர் நினைத்துள்ளார். மனைவி சந்தோஷமாக இருந்தாரா? இல்லையா? என்பதையெல்லாம் அவர் கவலைப்படாமல் அவர் வந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு சென்றுவிடுவார். மனைவி உடம்பு சரியில்லாமல் போனாலோ அல்லது சாப்பிடாமல் இருந்தால் கூட தனக்கு வேண்டிய நேரத்தில் அவருக்கு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டும். தாம்பத்திய உறவுக்கென்றே இருக்கும் உணர்வுகளை தான் இன்னமும் அனுபவிக்கவில்லை. இதனால், தான் மற்ற பிரச்சனைகள் வருகிறது என்று அந்த பெண் சொல்ல முடியாமல் சொன்னார்.
கணவரை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு அவர் கண்டிப்பாக வரமாட்டார் என்றார். அதன் பிறகு, தனது கணவரின் மரியாதைக்குரிய தோழியின் மூலமாக பேசி அவரை வரவைப்பதாகக் கூறி அந்த பெண் சென்றுவிட்டார். அதன்படி, அந்த நபர் வந்துவிட்டார். தங்களுக்குள் எந்தவித பிரச்சனை இல்லை என்று மேம்போக்காக அவர் பேசினார். இப்படி, நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, இண்டிமெஸி லைஃப் எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, எந்த பிராளப்ளமும் இல்லாமல் நன்றாக தான் சென்று கொண்டிருக்கிறது என்கிறார். இரண்டு பேருக்குமா? என்று கேட்டதற்கு ஆம இரண்டு பேருக்கும் தான் என்றார். இதை பற்றி மனைவியிடம் கேட்டிருக்கிறீர்களா? சந்தோஷமாக இருக்கிறாயா? இதையெல்லாம் கேட்டிருக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டேன். அவர் தடுமாறிக் கொண்டு யோசிக்கிறார். அவரிடம் நான், ஏதாவது கேள்வி கேளுங்கள் என்றதற்கு அவர் யோசித்துவிட்டு சாப்பிட்டிங்களா? என்று கேட்டார். நான் உடனே அவருக்கு பதிலளிக்காமல் பக்கத்தில் இருக்கும் லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன். திரும்ப திரும்ப அவர் அதே கேள்வியை கேட்கும் போது நான் பதிலளிக்காமல் லேப்டாப்பையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் புரியவில்லை என்றவுடன், நீங்கள் கேட்கும் கேள்விக்கு மெஷின் தான் பதில் சொல்லும். மனிதர்கள் உங்களுக்கு தேவை கிடையாது. உங்களுக்கு மெஷின் தான் தேவைப்படுகிறது என்று மெஷின், மெஷின் என்று அவரிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அப்போது, தான் செய்த தவறை உணர்ந்து கண்ணீர் விட்டார். அதோடு நாங்கள் பேசி அவரை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு, 1 மாதம் கழித்து இரண்டு பேரும் சேர்ந்து வந்தார்கள். அவர் வந்ததும், சாப்பிட்டிங்களா சார்? சார் மெஷின்கிட்ட கேட்கவில்லை உங்களிடம் தான் கேட்கிறேன் என்று சொன்னார். நான் சாப்பிட்டேன் என்றேன். அதோடு இந்த கவுன்சிலிங் அழகாக முடிந்துவிட்டது. அந்த பெண் ஒரு நாள், என்னிடம் இப்போது கணவர் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார் என்று போன் மூலம் சொன்னார்.