பொதுவாக எண்களை நினைவில் வைத்திருப்பதைக் காட்டிலும் எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது சுலபம்.
எனவே எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவற்றை எழுத்துக்களோடு தொடர்பு படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஆங்கில எழுத்து N.
இந்த எழுத்தில் இருபுறமும் இரண்டு கோடுகள் உள்ளன.
2 என்ற எண்ணுக்குப் பதிலாக N என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல M என்ற எழுத்தில் மூன்று கோடுகள் உள்ளன.
எனவே 3 என்ற எண்ணுக்குப் பதிலாக M என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
B என்ற எழுத்து 8 போலவே இருக்கிறது. எனவே 8க்குப் பதிலாக B என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
R என்ற எழுத்து ஆங்கிலத்தில் Four என்ற சத்ததை நினைவூட்டுகிறது. எனவே எண் 4க்குப் பதிலாக R என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
இதே போல வேறு சில எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.
1 L (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
5 C (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
6 S (ஓசையில் ஒத்திருக்கிறது)
7 T (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
9 P (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
0 D (வடிவத்தில் ஒத்திருக்கிறது)
ஒரு செல்பேசி எண் 98256 03421.
இதை நினைவில் வைத்துக்கொள்ள PBN CSD MRNL என்று மனப்பாடம் செய்து கொள்ளலாம்.
எண்ணை மனப்பாடம் செய்வதை விட, இந்த எழுத்துக்களை மனப்பாடம் செய்வது சுலபம்.
இந்த எழுத்துக்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும், அடுத்து செல்பேசி எண் நினைவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.
முந்தைய பகுதி:
நினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி! -மனதின் நூலகம் #2