detective malathis investigation 75

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்த 70 வயது கணவனைப் பற்றி மனைவி கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

ஒரு பெரிய மருத்துவ நிறுவனத்தில் கணவன் - மனைவி என இருவரும் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தனது 70 வயது கணவனுக்கு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேறு ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அதற்கான ஆதாரத்தை எடுத்து தரும்படி மனைவி சொன்னார். ஏற்கெனவே, தனது கணவனுக்கு பி.ஏ ஒருவரிடம் ஏற்பட்ட தொடர்பை தான் கண்டுபிடித்து சொன்னதற்கு பின்னால், அந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்திவிட்டார். இந்த முறை, தனது கணவன் வேறு ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தன்னால் தகுந்த ஆதாரத்தோடு கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், விசாரித்து ஆதாரத்தை தருமாறு கேட்டுக்கொண்டார்.

இதனை ஆதாரத்தோடு கணவரிடம் எடுத்து காட்டினால், இந்த விஷயம் மருத்துவமனை உள்ளிட்ட அவருடைய நட்பு வட்டாரத்திற்குக் கூட இதை தெரியாமல் பார்த்துக்கொண்டு, அந்த உறவை அவர் விட்டுவிடுவார் என்று அந்த பெண் சொன்னார். நாங்கள் அந்த கேஸை எடுத்துக் கொண்டு, அவரை ஃபாலோவ் செய்தோம். முதல்முறை அவரை ஃபாலோவ் செய்த போது எங்களால் அந்த ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டாவது முறையாக, அவர் வெளியே சென்ற போது பல்வேறு வண்டிகளை வைத்து அவரை ஃபாலோவ் செய்து அந்த ஆதாரத்தை எடுத்தோம். அதன் பிறகு, அந்த பெண்மணியிடம் கொடுத்தோம்.

Advertisment

சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பதால், பெயர் கெட்டுபோய்விடக் கூடாது என்பதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தனது கணவரிடம் தகுந்த ஆதாரத்தை வைத்து எடுத்துக் கூறுவதற்காக அந்த ஆதாரத்தை அந்த பெண்மணி பெற்றுக்கொண்டார்.