முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை பற்றி மனைவி கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்
55 வயது கொண்ட ஒரு பெண் என்னிடம் வந்து கேஸ் கொடுத்தார். அந்த பெண்ணுக்கு, 25 வயதில் மகள் இருக்கிறாள். டைவர்ஸ் ஆகாமல், தனக்கு தெரியாமல் தன்னுடைய கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவர் திருமணம் செய்த 55 வயது பெண்ணுக்கு, 23 வயதில் மகள் இருக்கிறாள். கணவர் செய்த இன்னொரு திருமணத்தை ப்ரூப் செய்வதற்காகவும், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு என்ன என்ன சொத்துக்களை கணவர் வாங்கி கொடுத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்காகவும் தான் என்னிடம் கேஸ் கொடுத்தார்.
நாங்கள் அந்த கேஸை எடுத்துக்கொண்டோம். இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ஆதாரங்களை இந்த பெண் வைத்திருந்தார். அதே போல், சொத்து வாங்கியதற்கான சில ஆதாரங்களையும் இந்த பெண் வைத்திருந்தார். அதன்படி, நாங்கள் அவரை ஃபாலோவ் செய்து தெளிவான ஆதாரங்களை அந்த பெண்ணுக்கு கொடுத்தோம்.