முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், எந்தவித சண்டை இல்லாத போது மனைவி டைவர்ஸ் கேட்பதாக கணவர் கொடுத்த வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்
தங்களுக்குள் எந்தவித சண்டையும் இல்லாமலும், மனைவி மீயூட்ச்சுவல் கன்செண்டில் டைவர்ஸ் கேட்பதாக கணவர் ஒருவர் என்னிடம் சொன்னார். மனைவி, இரண்டு குழந்தைகளோடு வாழ வேண்டும் என்று கூறினார். அவரிடம் விசாரித்ததில், மனைவிக்கு உறவினர் ஒருவர் வேலை வாங்கி கொடுத்ததன் பேரில், மனைவி நல்ல பொஷிசனில் இருந்ததால் அந்த உறவினருக்கு பிடிக்கவில்லை. மேலும், வேறு வேறு மதங்களை கொண்ட தாங்கள், காதல் திருமணம் செய்த தங்களுக்குள், பிஷிக்கலி ஷேலஞ்ஜில் ஒரு குழந்தையும், நன்றாக இருக்கும் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். எங்களுக்கு எந்தவித பிரச்சனையில்லை இருந்தாலும், மனைவி மீயுட்சுவல் கன்செண்டில் டைவர்ஸ் கேட்பதாக சொன்னார். மீயுட்ச்சுவல் கன்செண்டில் டைவர்ஸ் வாங்கினாலும், இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம் என்றும் மனைவி சொல்கிறார் எனச் சொன்னார்.
வேலை வாங்கி கொடுத்த அந்த உறவினர், இந்த பெண்ணை வேலையில் இருந்து தூக்கிவிட்டார். இதன் பிறகு, எந்த போன் வந்தாலும் தனியறையில் தான் மனைவி பேசுகிறார். தன்னை வேலையில் இருந்து தூக்கிவிட்டதை நினைத்து எண்ணி மனதளவில் பாதிக்கப்பட்ட இந்த பெண், இப்படி டைவர்ஸ் கேட்டுள்ளார் என்பது என்னுடைய கணிப்பாக இருந்தது. அதன் பின்னர், இந்த கேஸை எடுத்து கொண்டு இந்த பெண்ணை ஃபாலோவ் செய்தோம். ஹெச்ஆர் வேலையில் பணிபுரியும் வேறு ஒரு ஆண் நபர் கூட அடிக்கடி பேசி செல்கிறார். வேறு ஒரு கம்பெனியில் அதே போன்ற நல்ல பொஷிசினலில் வேலையில் சேருவதற்காக இந்த பெண் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படி போகும்போது, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் எல்லையை மீறுகிறது. வேலை வேண்டுமென்றால், தன்னுடைய இணக்கமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நபர் கண்டிசன் போட்டுள்ளார். வேலையா? கெளரவமா? அல்லது குடும்பமா? என்ற மும்முனை பிரச்சனையில் சிக்கிக்கொண்ட அந்த பெண் வேலைக்காக அந்த நபரிடம் பழகியதன் காரணமாக தான் கணவரிடம் டைவர்ஸ் கேட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்தோம். இந்த விவரத்தை கணவரிடம் சொன்னோம். ஆனால், மனைவியை பிரிந்து வாழ விருப்பமில்லாமல், கணவர் டைவர்ஸ் கொடுக்க மறுத்தார்.
எங்களின் அறிவுரையின்படி, மனைவி சொல்லும்படி டைவர்ஸ் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு ஆறு மாதம் வரை காலத்தை நீடித்து வந்தார். அதற்குள், அந்த நபரின் மறுபக்கத்தை கண்டுபிடித்து இந்த பெண்ணிடம் எடுத்துக் கூறி விவரித்தோம். அதன் பிறகு, தான் செய்தது தவறு என்று உணர்ந்த இந்த பெண், கணவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தாள்.