முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், கணவன் வீட்டிற்கே வருவதே இல்லை என மனைவி கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
எங்களுக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், கணவர் மாத மாதம் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்வதாகவும் என்னிடம் ஒரு பெண் போன் மூலம் சொன்னார். தனியாக இருந்தால், பிசினஸில் கான்சென்ரேட் பண்ண முடிகிறது என்று கணவர் கூறுகிறார். எப்போதாவது மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்தாலும், என்னிடம் பேசாமல் தனி அறையில் இருக்கிறார். கணவனுக்கு வேறு ஒரு தொடர்பு இருக்கிறது எனச் சந்தேகம் இருப்பதாகக் கூறி விசாரித்துக் கூறும்படி சொன்னார்.
அந்த பெண்ணிடம் மேற்படி விசாரித்ததில், பெண் வீட்டார் நல்ல வசதியான குடும்பம். பையனுக்கு வீடு, சொத்துக்கள் எல்லாம் கொடுத்து தான் திருமணம் செய்திருக்கிறார்கள். பையன் பிசினஸ் செய்ய விருப்பப்படும் போது அதற்கும் பெண் வீட்டார் சப்போர்ட் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு, இவர் அசுர வளர்ச்சியாக வளர்ந்திருந்துள்ளார். இவர் செய்யும் முக்கியமான பிசினஸில், அந்த பெண்ணை பார்ட்னராக சேர்த்திருக்கிறார்கள். ஒரு கையெழுத்துப் போடவேண்டுமென்றாலும், இந்த பெண்ணிடம் தான் வர வேண்டும். ஆனால், அந்த பிசினஸில் இருந்து பணத்தை எடுத்து வேறு சில பிசினஸ் செய்திருக்கிறார்.
அதன் பிறகு, நாங்கள் வழக்கம் போல் அவரை பாலோவ் செய்கிறோம். காலையில் ஆபிஸ், பிசினஸ் என பல்வேறு இடத்துக்கு போகிறார். இவருக்கு நிறைய பிசினஸ் இருப்பதால், எந்த நாளில் எந்த ஆபிஸில் இருந்து கிளம்புவார் என் பார்ப்பதில் மிகவும் சிரமமாக இருந்தது. சில நாட்கள் கழித்து அவர் எங்கே போகிறார் என்பதைக் கண்டுபிடித்தோம். இவரது வீட்டிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள ஒரு வீட்டில் இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார். அவர்கள், கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் எதுவும் இல்லை. அதன் பிறகு, அந்த பெண்ணை அழைத்து விஷயத்தை சொன்னோம். பிசினஸில் பார்ட்னராக இருப்பதாக உங்களை விட்டு அவரால் போகமுடியாது. அதனால், நீ வெளியே சென்று பிசினஸை பார்த்துக்கொள் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்து அனுப்பி வைத்தோம்.