Skip to main content

வெளிநாட்டில் உழைக்கும் கணவனுக்கு துரோகம் செய்த மனைவி -  டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 27

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 detective-malathis-investigation-27

 

கணவனுக்கு துரோகம் செய்த மனைவி பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்

 

வெளிநாட்டிலிருந்து ஒருவர் நம்மிடம் கேஸ் கொடுக்க வந்தார். தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் இந்தியாவில் இருப்பதாகவும் கூறினார். அவர் தன்னுடைய மனைவி சுயதொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை அங்கிருந்தே செய்து கொடுத்தார். அவருடைய தாய் தந்தையும் மனைவியுடன் தான் இருந்தனர். திடீரென்று அவருடைய மனைவியின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. கடையில் அவர் அதிக நேரம் இருப்பதில்லை. அடிக்கடி வெளியே சென்ற அவர், நீண்ட நேரம் கழித்தே திரும்பி வந்தார். 

 

அம்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது என்று குழந்தைகளும் அப்பாவிடம் தெரிவித்தனர். ஆனால் வேலை காரணமாக அம்மா அப்படி நடந்துகொள்கிறார் என்று குழந்தைகளை அவர் சமாதானப்படுத்தினார். ஆனால் தன்னுடைய தாய் யாருடனோ அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருப்பதாக மகன் தெரிவித்தான். ஒருநாள் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் வீட்டை விட்டே கிளம்பினார். ஆனால் கடை தன்னுடைய பெயரில் இருப்பதால் கடைக்கு மட்டும் தினமும் வந்தார். இதனால் இந்தியா கிளம்பி வந்த கணவர், இதுபற்றி நம்மிடம் கேஸ் கொடுத்தார். 

 

அவருடைய மனைவியை நாங்கள் பின்தொடர்ந்தோம். இன்னொருவரிடம் மனைவி போல் அவர் நெருக்கமாக இருந்தது தெரிந்தது. தன்னுடைய கணவரிடம் விவாகரத்து பெற அவர் முடிவு செய்தார். இன்னொருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த கணவர் அதிர்ச்சியானார். தன்னுடைய குழந்தைகள் பற்றி கூட அவருடைய மனைவி கவலைப்படவில்லை. குழந்தைகளும் மீண்டும் அவரிடம் செல்ல விரும்பவில்லை. அம்மாவின் அன்பு இல்லாமல் வளர்ந்த அந்தக் குழந்தைகள் தங்களுடைய தாய் தங்களுக்குத் தேவையில்லை என்று முடிவு செய்தனர். 

 

அந்த நிலைமைக்கு அந்தக் குழந்தைகள் தள்ளப்பட்டனர். உளவியல் ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு, இதனால் அவர்களுடைய திருமணத்தின்போது கூட பிரச்சனை ஏற்படும். இளவயதில் சொந்தங்களை யாரும் மதிப்பதில்லை. வயதான பின் அவர்கள் அதை உணரும்போது, அவர்களை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திருமணமான தம்பதியினரிடமிருந்து தான் எங்களுக்கு அதிகமான கேஸ்கள் வருகின்றன. அந்த நிலையில் தான் இன்று சமூகம் இருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Karthi Chidambaram says Enforcement should be pulled and closed

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

 

அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால்,  பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.  

 

 

 

Next Story

காதல் முறிவை தாங்காத காதலன்; மாணவியை கொன்று ஏரியில் வீசிய வெறிச்செயல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

the boyfriend who lost his ex-girlfriend and dumped her on the lake shore in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். 

 

இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.