குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
தையல்நாயகி என்ற பெண்ணுடைய வழக்கு இது. மருமகன் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக அந்த பெண்ணுடைய அப்பா என்னைச் சந்தித்து சொன்னார். தையல்நாயகியினுடைய கணவர் சேர்ந்து வாழ்வதற்காக மனு போட்டிருக்கிறார். திருமணத்திற்காக தான் கொடுத்த 35 பவுன் தங்க நகையை மருமகன் வைத்துக்கொள்வதற்காக தான் சேர்ந்து வாழ்வதற்காக மனு போட்டிருப்பதாகவும், நகையை கேட்டாலும் மருமகன் கொடுக்க மறுப்பதாகவும் தையல்நாயகியினுடைய அப்பா சொன்னார். வரதட்சணை தடைச் சட்டத்தில், பெண் வீட்டார் போடும் அனைத்தும் நகையும் பெண்ணுடைய சொத்து தான் என்று சொல்கிறது.
பையனுக்கும், பெண்ணுக்கும் இது இரண்டாவது திருமணம். இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். திருமணத்தின் போது தையல்நாயகிக்கு 35 பவுன் தங்க நகை போட்டிருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்த அந்த குறிப்பிட்ட சாதி வழக்கப்படி, நகை போட்டதற்கான விவரத்தை நோட் போட்டு எழுதியிருக்கிறார்கள். திருமணம் ஆகி 2 மாதம் ஆன போதும், தையல்நாயகியை அந்த பையன் தொடக்கூட இல்லை. இதனால், தையல்நாயகி தன்னுடைய அப்பா வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, நகை கொடுத்தற்கான விவரத்தையும், நோட் போட்டு எழுதிய காப்பியையும் அட்டாச் செய்து நகைகளை திரும்ப கொடுக்கும்படி போலீசில் தையல்நாயகியினுடைய அப்பா கம்ப்ளைண்ட் கொடுத்தார். இதனால், நகை போய்விடும் என்ற பயத்தில் அந்த பையன் சேர்ந்து வாழ்வதற்கான மனுவை போட்டுள்ளார். போலீஸும், நகைகளை திரும்ப கொடுக்கும்படி சொன்னாலும், அவன் கொடுப்பதாக கூறி காலங்களை தாழ்த்தி வந்துள்ளான். இதனால், 498 ஏ ஆஃப் ஐபிசி, 506 பிரிவு, 400 பிரிவு, 320 பிரிவு ஆகிய செக்சனில் வரதட்சணை கொடுமைப்படுத்துதல் கீழ் பையன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கிறார்கள். லோக்கல் கோர்ட்டில் இவனுடைய ஜாமீன் மனு, ஏற்றுக்கொள்ளப்படாததால், சென்னை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு போட்டு ஜாமீன் வாங்கினான். தன்னை ஜாமீனில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காகவும், போலீஸ் கேஸில் தப்பிப்பதற்காகவும் முன்கூட்டியே சேர்ந்து வாழ்வதற்கு மனு போட்டியிருக்கிறான்.
இதற்கிடையில், போலீசில் பதிவான எஃப்.ஐ.ஆரை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒரு கேஸ்ஸை போட்டு ஸ்டே வாங்கியிருக்கிறான். இதனை கண்டதும், அப்பாவும் மகளும் அதிர்ச்சியடைந்தார்கள். இதனையடுத்து, கேஸ்சலேசன் ஆஃப் பெயில் என்று பையனுக்கு கொடுத்த ஜாமீனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மனுவை போட்டேன். மேலும், நகைகளை எல்லாம் பையன் திருடிவிட்டதாக இடையீட்டு மனு ஒன்றையும் போட்டோம். நீதிபதி கண்டித்தன் பேரில், சமரசம் செய்து பையன் மீடியேசனுக்கு வந்து நகைகளை கொடுப்பதாகச் சொன்னான். இந்திய சட்டப்படி, மனைவி இறந்த பின்னால் அவளுடைய நகைகளை கணவரிடமோ அல்லது குழந்தைகளிடமோ கொடுக்கலாம். ஆனால், இங்கு வரதட்சனை கொடுமை செய்து நகைகளை வாங்கியும், தாம்பத்யம் நடக்காமல் குழந்தைகளும் இல்லாததால், அந்த நகைகள் அனைத்து பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.
திருமணம் செலவு பெரிதாக எதுவும் இல்லாததால், இந்த பெண் இந்த வழக்குக்காக பல இடங்களுக்கு அலைந்தும், செலவு செய்திருப்பதால் அவளுக்கு பையன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பேசினோம். ரொம்ப பேசிய பிறகு, நகைகளையும், நஷ்ட ஈட்டுக்கான 3 லட்ச ரூபாயை கொடுப்பதாக அந்த பையன் ஒப்புக்கொண்டான். இருவரும் சமரசம் ஆகி பிரிய உள்ளதாக ஹை கோர்ட்டில் பேசினோம். ஆனால், பணத்தை இன்னமும் கொடுக்காததால், குடும்ப நீதிமன்றத்தில் மீயூட்ச்சுவல் கன்செண்டில் டைவர்ஸ் வாங்கி பணத்தையும், நகைகளையும் கொடுத்தால் தான், இந்த கேஸை முடிப்பேன் என்று நீதிபதி சொல்லிவிட்டார். அதன் பிறகு குடும்ப நீதிமன்றத்தில் பெட்டிசன் போட்டு டைவர்ஸ் வாங்கினோம். நாங்கள் போட்ட கேஸை தள்ளுபடி செய்தால் தான், பணத்தையும் நகைகளையும் கொடுப்பதாக கூறி டிடி மட்டும் கொடுத்தான். அதன் பிறகு, அந்த பையன் கொடுத்த டிடியை வைத்து நீதிபதியிடம் காண்பித்து பணத்தையும், நகைகளையும் பெற்றுக்கொண்டதாக பெண் அக்னாலஜ்மெண்ட் கொடுத்தார். அதன் பின்னர், தான் அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதன் பிறகு, நஷ்ட ஈடு பணமும், 35 பவுன் நகையும் இந்த பெண்ணுக்கு கிடைத்தது.