/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/santha_7.jpg)
குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
திரிபுரசுந்திரி என்ற பெண்ணுடைய வழக்கு இது. இவர் சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடைய கணவர் தன்னுடன் இல்லாததாலும், வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதாலும் டைவர்ஸ் வேண்டும் என்று தான் அந்த பெண் என்னிடம் வந்தார்.
திரிபுரசுந்திரியும் அவருடைய கணவரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். இவள் அதிகமாக சம்பாதிப்பதால், அந்த பையனும் பணத்தை எதிர்பார்த்து கல்யாணம் செய்திருக்கிறார். பையனுடைய வீட்டாரும், இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டு மருமகளை மாமியார் நன்றாக கவனித்து வந்துள்ளார். பையன் லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளான். இவர்களுக்குள் பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் இவர்களுக்குள் வாக்குவாதம் வருகிறது. கடைசியில் இவள் சொன்ன பெயர் தான் குழந்தைக்கு சூட்டப்படுகிறது. குழந்தையை கவனிப்பதால் திரிபுரசுந்தரிக்கு இயற்கையாகவே தாய்மை உணர்வு அதிகமாக இருக்கிறது. இதனால், தம்பதி இருவருக்குள் இருக்கும் அன்யோன்யம் குறைகிறது.
சில நாட்கள் சென்ற பின்பு, பையனுடைய ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கொஞ்ச கொஞ்சமாக மாறுகிறது. இது மாதிரியெல்லாம் புதுமையாக உடை அணிய, மனைவியும் இது பற்றி கேட்க அவன் ஆபிஸரை பார்க்க வேண்டியிருந்ததால் இப்படி உடை அணிகிறேன் என்று சொல்லியுள்ளான். எப்போதும் வீட்டுக்கு வந்து சாப்பிடும் கணவன், திடீரென்று சாப்பாட்டு நேரத்திலும் அவன் வருவதில்லை. வேலை அதிகமாக வரமுடிவதில்லை என்று கூறியதையும் அவள் நம்பிக்கொண்டிருந்தாள். இரவிலும், வெகு நேரம் கழித்து அவன் வீட்டுக்கு வருகிறான். மகன் போகும் போக்கு சரியில்லை என அம்மாவுக்கும் சந்தேகம் வருகிறது. மேலும், மனைவிக்கு சந்தேகம் வந்து கணவன் வேலை செய்யும் லேத் பட்டறைக்கு சென்று விசாரித்ததில் அவன் வெளியே சென்றிருப்பதாகவும் தகவல் வருகிறது.
நாட்கள் செல்ல செல்ல, திருமணமான ஒரு பெண்ணுக்கும் தன் கணவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் இவளுக்கு தகவல் வருகிறது. கணவன் லேட்டாக வருவதைப் பற்றி அவனிடம் கேட்டு சண்டை பிடிக்கிறாள். இதுபற்றியும் தாயும் கேட்க, சில நாட்கள் கழித்து வீட்டுக்கே வராமல் இருக்கிறான். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வருகிறான். இவள், அந்த பெண்மணியின் கணவரிடம் இந்த தகாத உறவைப் பற்றி சொல்கிறாள். அந்த கணவனும், இவளிடம் சண்டை போடுகிறான். அந்த குடும்பத்துக்கு தேவையான அனைத்தையும் திரிபுரசுந்திரியின் கணவன் தான் செய்கிறான் என்பது இவளுக்கு தெரியவருகிறது. இது ஒரு வித்தியாசமான உறவு. இதற்கிடையில், திரிபுரசுந்திரியின் அப்பா தன் மகளுக்கு கொடுத்த இடத்தை பிசினஸ் செய்வதற்காகக் கணவன் கேட்கிறான். இடத்தை விற்க முடியாது என திரிபுரசுந்தரியும் மறுத்துவிடுகிறாள். இதில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது.
இதனால், தனக்கு சொந்தமான ஒரு இடத்தில் திரிபுரசுந்தரியின் கணவன் ஒரு வீட்டை கட்டுகிறான். அந்த வீட்டிலும் தன் மனைவியை அனுமதிக்க முடியாது என்று அதை வாடகைக்கு விடப்போவதாகவும் கூறுகிறான். இதனால், இருவருக்கும் இடையே பிளவு ஏற்படுகிறது. தனக்கு பணமே கொடுப்பதில்லை, கணவன் தகாத உறவு வைப்பதிருப்பதாகவும் இவள் போலீஸில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். பணத்தின் பலத்தால், போலீசில் இவள் கொடுத்த கம்ப்ளைண்ட் எடுபடாமல் போனதால் திரிபுரசுந்தரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவளும், தன் அப்பா கொடுத்த இடத்தில் ஒரு வீட்டை கட்டி அந்த வீட்டில் தனியாக குடிப்போகிறாள். அதன் பிறகு, தன் கணவனுடன் சேர்ந்த வாழ வேண்டும் என்று வழக்குப்போடுகிறாள். இவள் தன் மீது சந்தேகப்படுவதாக அவன் சொல்கிறான். கடைசியில் தனக்கு மெயிண்டெனன்ஸ் வேண்டும் என்று இவள் சொல்ல, அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைக்கு 10,000 ரூபாயும், தன் மாமியாருக்கு 5,000 ரூபாயும் கொடுக்க ஒப்புக்கொண்டான். இவள் எவ்வளவு போராடியும் ஒன்றும் நடக்கவில்லை. இவள் தன் மீது அதிகமாக சந்தேகப்படுவதால் அவளுடன் வாழவே விருப்பமில்லை எனக் கூறி அந்த பையன் டைவர்ஸ் கேஸ் போட்டான். அதன் பிறகு மீடியேசன்ஸ் நடத்தி பிறகு குழந்தை பேரில் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டான். கணவன் கட்டிய வீட்டை தன் குழந்தை பேரில் எழுதி வைக்கக் கோரி இவள் கேட்க, கடைசியில் 7 லட்சம் ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டான். அதன் பிறகு, மீயுட்ச்சுவல் கன்செண்டில் இருவருக்கும் விவாகரத்து ஆனது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)