Skip to main content

ஏமாற்றிய புதுப்பெண்; தொழில்நுட்பத்தால் கண்டறிந்த மாப்பிள்ளை-வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:33

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 advocate-santhakumaris-valakku-en-33

 

கணவனை ஏமாற்றிய மனைவியின் வழக்கு பற்றி குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

பிரசன்னா என்கிற பையனுடைய கதை இது. அவர் அமெரிக்காவில் வேலை செய்து வந்தார். பெற்றோர் அவரை கஷ்டப்பட்டு வளர்த்ததால் வாழ்க்கையின் அருமை அவருக்கு தெரிந்திருந்தது. ஒருநாள் அவர் என்னைப் பார்க்க வந்தார். அவருக்கு கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் அது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு பெண்ணுடன் அடிக்கடி அவர் போனில் பேசினார். ஆனால் பெண் அவ்வளவு உற்சாகமாக பேசவில்லை. அவளுடைய இயல்பே அதுதான் என்று பெண்ணின் அப்பா தெரிவித்தார். 

 

கல்யாணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு ஒரு போன் வந்தது. "நீ அந்தப் பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அது என்னுடைய ஆள்" என்றான் ஒருவன். இல்லையெனில் அவன் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டினான். அந்தப் பெண்ணிடம் இவன் பேசினான். இதுகுறித்து அவன் விசாரித்தான். அவை அனைத்தையும் அவள் அடியோடு மறுத்தாள். ஆனாலும் அவனுக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டது. கல்யாணம் நடைபெற்றது. முதலிரவுக்கு அந்தப் பெண் மறுத்தாள். முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு தான் அது நடக்க வேண்டும் என்று கூறினாள். அவனும் அதைப் புரிந்துகொண்டான்.

 

இருவரும் அமெரிக்காவுக்கு கிளம்பினர். "அனைத்தையும் இங்கேயே விட்டுவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கு" என்று விமான நிலையத்தில் அவளுடைய தாய் அவளுக்கு அறிவுரை கூறினார். இதை அவன் கேட்டான். அவர்கள் அமெரிக்கா சென்றடைந்தனர். அவனுடைய அருகில் செல்லவே அவள் தயாராக இல்லை. அவளிடம் அவனுக்குத் தெரியாமல் ஒரு போன் இருந்தது. அதில் அடிக்கடி யாருக்கோ அவள் போன் பேசிக்கொண்டிருந்தாள். அவன் ஆபீசுக்கு கிளம்பும்வரை அவள் எழவே மாட்டாள். அவளிடம் அவனுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. 

 

ஒருநாள் அவள் போனில் பேசிக் கொண்டிருந்தபோது போன் கீழே விழுந்து உடைந்தது. அதை எடுத்து அவள் உள்ளே வைத்தாள். அவள் ஒரு ஆணோடு தொடர்ந்து பேசுவதை தொழில்நுட்ப கருவி மூலம் அவன் கண்டுபிடித்தான். அவர்களின் உரையாடலில் காமம் இருந்தது. அவளாக சிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். "பெற்றோரைப் பார்க்க விருப்பமா?" என்று கேட்டான். உடனே அவள் சம்மதித்தாள். டிக்கெட் போட்டு அவளை அனுப்பி வைத்தான். இந்தியாவுக்கு வந்த பிறகு அடுத்த நாள் தான் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு அவள் வந்தாள். இதற்கு மேலும் காத்திருப்பது சரியில்லை என்று முடிவு செய்து அவன் என்னிடம் வந்தான். 

 

நடந்த அனைத்தையும் அவன் என்னிடம் கூறினான். தொழில்நுட்ப உதவியின் மூலம் அவளுடைய தொடர்புகளை அவன் கண்டுபிடித்ததால், அமெரிக்க சட்டத்தின்படி அதை அவனால் வெளிப்படுத்த முடியாது. அவர்களுக்குள் உறவு சரியாக இல்லை என்கிற அடிப்படையில் நாங்கள் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தோம். அவள் செய்த தவறுகள் அனைத்தையும் அவளிடம் நேரடியாக நான் கூறினேன். அந்தப் பெண் நோட்டீசை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்கு வரவில்லை. அதனால் அந்தப் பையனுக்கு விவாகரத்து கிடைத்தது. திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் இப்போது அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். உங்களுக்குப் பிடித்தால் திருமணம் செய்துகொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்றாலோ, இன்னொருவர் மீது காதல் இருந்தாலோ, தயவுசெய்து விட்டுவிடுங்கள் என்பதுதான் அனைவருக்கும் என்னுடைய ஆலோசனை.
 

 

 

 

Next Story

மாமியாரிடம் மோசடி; மருமகளுக்கு சிறை தண்டனை - காலம் கடந்து வென்ற நீதி!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Cheating on mother in law Jail sentence for daughter in law  justice won over time
மருமகள் நந்தினி - மாமியார் சந்தானலட்சுமி

பூந்தமல்லி பகுதியை சேர்ந்த நந்தினி, தனது கணவர் ரவி எட்வின் விபத்தில் இறந்ததில் இருந்து தன்னுடைய மாமியார் சந்தானலட்சுமி தன்னை கொடுமைப்படுத்துவதாக புகாராளித்து வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், சொத்தை அபகரிக்கும் முயற்சியில் தன் மாமியார் சந்தானலட்சுமி மீது பொய்யான புகார் கொடுத்துள்ளதையும், போலியான கையெழுத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையையும், சொத்தையும் அபகரிக்க முயன்றுள்ளார் என்பதும் நிரூபணமானதால், அவ்வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக சந்தானலட்சுமியின் வழக்கறிஞர் பிரதீப் அசோக்குமார் கூறுகையில், "பூந்தமல்லியைச் சார்ந்த மறைந்த எட்வின்ஸ்பின் என்பவரின் மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு ராஜா எட்வின், ரவி எட்வின் என்ற இரு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் சந்தான லட்சுமி சவுதி அரேபியாவில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வரும் தன் மூத்த மகனான ராஜா எட்வினுடன் தங்கியிருந்தார். சென்னைக்கு அடிக்கடி வந்து செல்வார். ராஜா எட்வின் சம்பாதித்த பணத்தில் அவர் விருப்பத்தின்படி, பூந்தமல்லி பாலாஜி நகர் மற்றும் வாசுதேவன் நகரில் சொகுசு வீடுகளை தன் பெயரில் வாங்கியிருந்தார் சந்தானலட்சுமி. 

Cheating on mother in law Jail sentence for daughter in law  justice won over time
வழக்கறிஞர் பிரதீப் அசோக்குமார்

இந்த நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை கிண்டியில் நடந்த சாலை விபத்தில் ரவி எட்வின் உயிழந்தார். மகன் இறந்த செய்தியறிந்து சவுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்தார் சந்தான லட்சுமி. இளைய மகனுக்கான ஈமச்சடங்குகள் முடிந்த சில தினங்களிலேலே, ரவி எட்வினின் மனைவி நந்தினியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இருவருக்குமிடையே சிறு சிறு சண்டைகள் உருவான நிலையில், கே.கே.நகரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மூலம் அடியாட்களை வைத்து சந்தானலட்சுமியை வீட்டை விட்டே விரட்டியடித்தார், பின்னர் 2010ஆம் வருடம் சவுதியிலிருக்கும் தன் மூத்த மகனிடமே சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நந்தினி, கடந்த 2017ஆம் ஆண்டு மாமியார் சந்தானலட்சுமி மீது குடும்ப நல வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கு விசாரணையில், எங்கள் தரப்பில் சில ஆவணங்களை சரிபார்த்த நிலையில், நந்தினிக்கு ஏற்கெனவே உமாமகேஸ்வரன் ராவ் என்பருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது தெரியவந்தது. அவரோடு விவாகரத்தானபின் ரவி எட்வினுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரவி எட்வின் விபத்தில் இறந்தார். அதன்பின்னர், முதல் கணவரின் பெண் குழந்தையை இரண்டாவது கணவரான ரவி எட்வினின் வாரிசு என்று போலியாக வாரிசுச் சான்று பெற்றது தெரியவந்தது. 

சந்தானலட்சுமி

மேலும், கடந்த 2010, பிப்ரவரியில், சந்தான லட்சுமி சவுதிக்கு சென்ற பின்னர், விபத்தில் பலியான ரவியின் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக சந்தானலட்சுமியின் கையெழுத்தை போலியாகப் போட்டிருந்த மோசடியும் தெரியவந்தது. இந்த காப்பீட்டுத் தொகை வங்கிக்கு வந்த நிலையில், வங்கி மேலாளரிடம் காப்பீட்டுத் தொகை 23 லட்சத்தை வழங்குமாறு நந்தினி வற்புறுத்தியுள்ளார். அதற்கு வங்கி மேலாளர் மறுப்பு தெரிவித்த நிலையில், சந்தானலட்சுமி சார்பில் சிறு வழக்கு நீதிமன்ற பதிவாளரிடம் புகார் மனு அளித்தோம். எங்களுக்கு தெரியாமல் இழப்பீடு தரக்கூடாது என்று புகாரளித்தோம்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர் நீதிமன்றம் மூலம் முதல் தகவல் அறிக்கை பெற்று, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சார்பில் விசாரணை நடத்தினர். இதில் 18 பேர் அளித்த சாட்சியங்களின் பெயராலும், 35 அரசு தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்த நிலையிலும், நந்தினி மோசடி செய்தது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

அதையடுத்து, நந்தினி குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு மூன்று வருடம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையிலேயே கடந்த 2018ஆம் ஆண்டு சந்தான லட்சுமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது ஒரு வருத்தமான நிகழ்வு. ஆனாலும் இன்றுவரை சந்தான லட்சுமிக்கு சொந்தமான பூந்தமல்லியிலுள்ள பாலாஜி நகர் மற்றும் வாசுதேவன் நகரிலுள்ள சொத்துக்கள் நந்தினியின் அனுபவத்தில்தான் உள்ளது என்பது வருத்தமாக ஒன்று. மனுதாரர் இறந்த நிலையிலும் அவருக்கு நீதி கிடைத்துள்ளது என்ற வகையில் இத்தீர்ப்பு குறித்து பெருமிதம் கொள்கிறோம்" என்றார். கால தாமதம் ஆனபோதிலும், இவ்வழக்கில் நீதி வென்றிருப்பது, நீதித்துறையின் மீது நம்பிக்கை அளிக்கிறது. 

Next Story

மாதவிடாய் நாளில் வீட்டுக்குள் வரக்கூடாது; அடாவடி மாமியாரிடம் சிக்கிய மருமகள் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 55

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Advocate santhakumaris valakku en 55

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ராதா என்கிற பெண் இரண்டாவது திருமணம் செய்தவர். என்னை பார்க்க வந்திருந்தார். ஆரம்பிக்கும் போதே தான் ஒரு ஐயர் பெண் என்று ஆரம்பித்தார். சாதியைக் குறிப்பிட ஒரு காரணம் இருக்கிறது என்றும், அது தன்னை எவ்வளவு பாதித்தது என்றும் சொல்ல வந்ததால் தான் குறிப்பிட்டு சொன்னேன் என்று தன் கதையை ஆரம்பித்தார். ராதா மூன்று டிகிரி வாங்கியவர், வேலை பார்க்கும் நல்ல திறமையானவர். முதல் திருமணம் தோல்வியில் முடியவே ஒரு சோர்வு வருகிறது. அதனால், தனியாக பெங்களூரில்தான் வேலை பார்த்து வருகிறார். 

அவளது பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பேசி சம்மதிக்க வைத்து தன்னை போலவே இரண்டாவதாக வரன் பார்க்கும் பையனை பார்த்து பேச பிடித்து போகிறது. அவர்கள் ஐயங்கார் பிரிவினர். எனவே நாங்கள் வெங்காயம் சாப்பிடமாட்டோம். ரொம்ப ஆச்சாரமாக இருப்போம் என்றும் தன்னுடய பெற்றோர் மிகவும் வயதானவர்கள். தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும். எனவே தனிக் குடித்தனம் வரமுடியாது என்று சில கண்டிஷன் போடுகிறான். ராதாவும் குடும்பத்துடன்தான் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டு ஒத்துக்கொண்டு மிக எளிதாக திருமணம் நடக்கிறது. 

வேலையும் விட சொல்கிறார்கள். அம்மா வீடு அதே சென்னையில் இருந்தாலும் அடிக்கடி போகக்கூடாது என்று வேறு சொல்லி விடுகிறார்கள். திருமணம் ஆகி போன நாளிலிருந்து வீட்டில் மாமியார் மிகவும் கெடுபிடி என்று புரிந்து கொள்கிறாள். அன்பாக பேசுவதே இல்லை. சமையல் அறையில் அவளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. குளித்த பின்னரே தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று உத்தரவு வேறு. மாமனார் அதிகமாக பேசுவதில்லை என்றாலும் போய் வர இருக்கும்போது மறைமுகமாக குத்திக் காட்டுவது என்று இருக்கிறது. காரணம், சாதி பிரிவில் தன்னை விட ஐயர் பிரிவினர் தனக்கு கீழே என்ற போக்கிலே அவளை நடத்துகிறார்கள். இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடியக்கூடாது என்று இவள் பொறுத்துப் போகிறாள். 

அந்தப் பெண்ணுக்கு, அளவான சாப்பாடே போடப்படுகிறது. மேலே பசித்தாலும் கிட்சனில் அனுமதி இல்லை. வெளியே வாங்கி கொள்ளவேண்டும் என்று கேட்டாலும், கணவன் அம்மாவிடம் பணம் கேட்டு கொள் என்கிறான். வீட்டிலே அடைந்து கிடக்க வேலைக்கு போக அனுமதி கேட்டதும் முதலில் கிடைக்கவில்லை. இவள் பார்க்கும் பார்மஸி வேலை சென்னையில் கிடைக்கவில்லை. ஒருநாள் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் வீட்டை பூட்டி விட்டு குடும்பமாக சென்று விட்டு நெடு நேரம் இவளை வாசலிலே நிற்க வைத்து விடுகின்றனர். இதுபோல இனி நடக்காமல் இருக்க இன்னொரு சாவி மாமியாரிடம் கேட்டபோது அது இன்னும் ஒரு பெரிய பிரச்சனையாக ஆனது. இவள் மாதாந்திர மாதவிலக்கானால் மூன்று நாட்கள் உள்ளே அனுமதி இல்லை. அதனுடன் வேலைக்கு சென்று விட்டு வந்து இவர்கள் போடும் கண்டிஷனில் சிரமமாக தான் வாழ்கிறாள்.

பொறுக்க முடியாமல் இயலாமையால் இது போலதான் முதல் மனைவியையும் நடத்தினீர்களா? அதான் சென்றுவிட்டாளா? என்று கேட்டு விட, கணவன் தன் அம்மாவை எப்படி இது போல பேசலாம் என்று பேச்சாகி விட்டது. கணவனிடம் எதிர்பார்த்த அன்பு, அக்கறை எல்லாமே போய்விட்டது. இப்படியே ஒரு வருடம் போனது. பெங்களூரில் வேலை கிடைக்க சனி, ஞாயிறு மட்டுமே வீட்டிற்கு வருகிறாள். வந்திருக்கும் ஒருநாளில் சேர்த்து வைத்து கொடுமைகள் காட்டப்படுகிறது. கணவனிடமும் வாழ விடுவதில்லை. 

அந்தச் சமயம் எதிர்பாராதவிதமாக முதல் மனைவியின் சொந்தக்காரர் ஒருவரை, ராதா பெங்களூரில் ஒரு பார்ட்டியில் சந்திக்கிறாள். ஒருவரை ஒருவர் யார் என்று பகிரும்போது அவளுடைய கணவனின் முதல் மனைவியின் சொந்தக்காரர் என்று சொல்லி அந்த மாமியார் சேர்ந்து வாழவே விடமாட்டாள் என்கிறார். நாங்கள் கடைசியில் நாற்பது லட்சம் கொடுத்தோம் என்று சொல்லவும் இவளுக்கு பெரிய அதிர்ச்சி. எனவே சேர்ந்து வாழ வேண்டும் என்று பெட்டிஷன் போட்டு தனியாக வாழ வேண்டும் அல்லது வாரம் ஒரு முறை பெற்றோர் பார்க்க வரலாம் என்று கேட்டு பார்க்கிறாள். 

இந்தத் திருமணத்தை தக்க வைத்து கொள்ள பார்க்கிறாள். ஆனால் கணவன் சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் இருக்கிறான். மேலும், அவள் பயணம் செய்து வேலை பார்த்து திரும்புதலை காட்டி அவள் நடத்தையை சந்தேகமாக பேசுகிறான். நாங்கள் நிரந்தர ஜீவானாம்சம் கேட்டு பார்த்தோம். ஒரு பைசாக்கு கூட மறுத்தார்கள். இந்தப் பெண் வழக்குக்காக, பெங்களூரிலிருந்து சென்னை வந்து ரயில் நிலையத்தில் குளித்து என்று ரொம்ப சிரமப்பட்டாள். கவுன்சிலிங் வைத்தபோது கூட கணவன் தன் பெற்றோரைக் கூட்டி வரவில்லை. மீடியேஷன் போட்டு இறுதியாக ஐந்து லட்சம் ஒத்துக் கொண்டார்கள். ம்யூச்சுவல் கன்செண்ட் போட்டு கடைசியாக விவாகரத்து ஆனது.