Skip to main content

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மாற்றம்? - பீல்டிங் பயிற்சியாளர் பதில்!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

team india

 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று (18.06.2021) இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் தொடங்க இருந்தது. ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் முதல்நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது.

 

அதேநேரத்தில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று அரை மணிநேரம் முன்னதாக தொடங்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் களமிறங்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மழையின் காரணமாக அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னும் டாஸ் போடப்படாததால், களமிறங்கும் அணியில் மாற்றங்கள் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தநிலையில், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரிடம் களமிறங்கவுள்ள அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என கேள்வியெழுப்பட்டது. இதற்குப் பதிலளித்துள்ள ஸ்ரீதர், "ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணி, எந்தவொரு ஆடுகளத்திலும், எந்தவொரு வானிலை சூழலிலும் விளையாடக்கூடியது. அதேநேரத்தில் டாஸ் இன்னும் போடப்படவில்லை. எனவே மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருந்தால் டாஸின்போது முடிவு செய்வோம்" என கூறியுள்ளார். 

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

அரையிறுதிக்கு இதுதான் வழி; பாகிஸ்தான் காட்டிய அதிரடி!

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Pakistan vs new zealand world cup cricket score update

 

உலகக் கோப்பையின் 35 ஆவது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (04-11-23) நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. 

 

இதில் அதிகபட்சமாக ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 108 ரன்களை குவித்தார். அதே போல், வில்லயம்சன் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடித்து 95 ரன்களை எடுத்து அவுட்டானார். இதில்  பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது வாசிம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடத் தொடங்கியது.

 

அதனை தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபஹர் ஷமான் சதமதித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 106 ரன்களுடனும், பாபர் அசாம் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 47 ரன்களுடனும் ஆடிய நிலையில், 21.3 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மழை நின்றதால் 6.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக சதம் அடித்த ஷமான் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.